கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகமும், கலைமகள் கலை அறிவியல் கல்லூரியும் இணைந்து தொழிற்நெறி வழிகாட்டும் கண்காட்சி

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகமும் கலைமகள் கலை அறிவியல் கல்லூரியும் இணைந்து வரும் மார்ச் 14ம் தேதியன்று கலைமகள் கலைக் கல்லூரி வளாகத்தில் தொழிற்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடைபெறவுள்ளது. இதில், கோவை மாவட்ட ஆட்சியர் பங்கேற்று வேலை வழிகாட்டும் கையேட்டினை வெளியிட உள்ளார்.

இத்தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் பல்வேறு வேலைவாய்ப்புகள் மற்றும் கல்விகள் தொடர்பான விவரங்கள் பார்வைக்கு வைக்கப்படுவதுடன் வல்லுநர்களால் இவ்விவரங்கள் மிகத் தெளிவாக எடுத்துரைக்கப்பட உள்ளது.

வேலைவழிகாட்டி கையேட்டில் உயர்கல்வி பற்றிய விவரங்கள், கல்விக்கான உதவி தொகை பெறுதல், உயர்கல்வி வேலைவாய்ப்புகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு, திறன் மேம்பாட்டு பயிற்சி, எந்த வேலைவாய்ப்பு பெற என்ன கல்வித் தகுதி தேவை என்பது பற்றிய விவரங்கள் முப்படைகளில் சேர என்ன கல்வித் தகுதி, அதில் உள்ள வாய்ப்புகள் மற்றும் போட்டி தேர்வுகள் பற்றிய விவரங்கள் மற்றும் அரசு வேலைவாய்ப்புகள் பற்றிய இணையதள முகவரிகள் அளிக்கப்பட்டுள்ளது. இத்துடன் பொதுவாக வாழ்வில் முன்னேற உரிய தகவல்கள் அளிக்கப்படுகிறது.

எனவே, கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள் இக்கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் பங்கேற்று பெருமளவில் பயன்படுத்திக்கொள்ளுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...