கோவை இளைஞர் கொலை வழக்கு - குற்றவாளி குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு!

கோவையில் கணுவாய் பகுதியைச் சேர்ந்த இளைஞர் சிரஞ்சீவி கொலை வழக்கில் கைதான குற்றவாளி முத்தையா என்ற நபர், மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி உத்தரவுப்படி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.


கோவை: கோவை மாவட்டம் வடவள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்த திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த வனுமாமலை மகன் முத்தையா (வயது33) என்ற நபர் கணுவாய் பகுதியை சேர்ந்த பாலமுருகன் மகன் சிரஞ்சீவி (வயது26) என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக வடவள்ளி காவல் ஆய்வாளர் கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தார்.

ஏற்கனவே குற்ற செயல்களில் ஈடுபட்டும், தொடர்ந்து பொது அமைதிக்கும் சட்ட ஒழுங்கிற்கும் பாதகமான செயலில் ஈடுபட்ட குற்றத்திற்காக முத்தையா மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர பத்ரிநாராயணன் பரிந்துரை செய்தார்.

அதன்பேரில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி மேற்கண்ட நபர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். அந்த உத்தரவின் அடிப்படையில் கொலை வழக்கு குற்றவாளியான முத்தையா என்பவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் போலீசார் அடைத்தனர்.

மேலும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை தொடரும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார். இந்த வருடத்தில் இதுவரை கோவை மாவட்டத்தில் 18 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...