கோவையில் மாயமாகி பொள்ளாச்சியில் மீட்கப்பட்ட சிறுமியின் புகைப்படத்தை, சிறுமியின் எதிர்காலம் கருதி பொதுமக்கள் சமூக வலைதளங்களில் இருத்து நீக்குமாறும், வரும் காலங்களில் சிறுமி காணாமல் போன செய்தியை பகிர வேண்டாம் என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவையில் மாயமாகி பொள்ளாச்சியில் மீட்கப்பட்ட சிறுமியை கண்டுப்பிடிக்க உதவியாக இருந்த பொதுமக்களுக்கு காவல்துறை சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை ஒண்டிப்புதூர் பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி நேற்று முன் தினம் மாயமானார். இதையடுத்து கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து, 6 தனிப்படை அமைத்து சிறுமியை தேடி வந்தனர். இந்நிலையில் மாயமான சிறுமி பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் நேற்று இரவு சிறுமி மீட்கப்பட்டார். மீட்கப்பட்ட சிறுமியை தனிப்படை போலீசார் கோவை அழைத்து வந்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
முன்னதாக சிறுமியிடம் மேற்கொண்ட விசாரணையில் அதிகமாக செல்போன் பார்ப்பதாக கூறி சிறுமியின் தாய் திட்டியதாகவும், இதனால் ஆத்திரமடைந்த சிறுமி வீட்டில் இருந்த 500 ரூபாயை எடுத்துக் கொண்டு, கோவையிலிருந்து பொள்ளாச்சி சென்றதாகவும், அங்கிருந்து பழனிக்கு சென்று முருகன் கோவிலில் தரிசனம் செய்துள்ளார்.
பின்னர் அங்கிருந்து கேரளா மாநிலம் கோழிஞ்சாபாறையில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்ல முயன்றுள்ளார். அங்கு அதிகளவு மழை பெய்ததால் அச்சமடைந்து மீண்டும் பொள்ளாச்சிக்கு வந்துள்ளார்.
பேருந்து நிலையத்திலிருந்த பயணியிடம் செல்போனை வாங்கி தனது தாயிற்கு அழைத்துள்ளார். இதையடுத்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு, பின்னர் சிறுமியை தனிப்படை செய்த போலீசார் மீட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் காவல்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், கோவை மாநகர் இ-1 காவல் எல்லைக்குட்பட்ட ஒண்டிப்புதூர் பகுதியில் கடந்த 17ஆம் தேதி காணாமல் போன ஸ்ரீநிதி என்ற 12 வயதுடைய சிறுமியை விரைவாக கண்டுபிடிக்க வேண்டி நல்லெண்ண அடிப்படையில், அவரது புகைப்படத்தை பலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தனர்.
மேற்படி காணாமல் போனது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு புலன்விசாரணையில், அச்சிறுமியை 18ஆம் தேதி பொள்ளாச்சியில் வைத்து கண்டுப்பிடிக்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
மேற்படி சிறுமி எதிர்காலம் கருதி அவர் காணாமல் போனது தொடர்பாக அவரது புகைப்படத்துடன் பகிரப்பட்ட பதிவுகளை சமூக வலைதளங்களில் இருந்து பொதுமக்கள் தாங்களாகவே நீக்கி கொள்ளுமாறும், வரும் காலங்களில் சிறுமி காணாமல் போன செய்தியை பகிர வேண்டாம் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.