விரைவில் அமலாகிறது ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு கட்டாய ஆதார் எண்

ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்படும் திட்டம் விரைவில் அமலாகும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்தார். இதன் மூலம் போலி அடையாள அட்டைகள் மூலம் பெரிய எண்ணிக்கைகளில் ரயில்வே டிக்கெட்டுகளை புக் செய்வதை தடுப்பதும், மோசடியான டிக்கெட் முன்பதிவுகளையும், ஆள்மாறாட்டத்தையும் தடுக்க முடியும் என்று அவர் தெரிவித்தார். மூத்த குடிமக்கள் ரயில் டிக்கெட்டுகளுக்கான சலுகைகளைப் பெற வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஆதார் எண் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டது, இதற்கான 3 மாத வெள்ளோட்டமும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் 2017-18-க்கான புதிய வர்த்தக திட்டத்தை வெளியிட்ட மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, ஆதார் எண் கட்டாயமாக்கப்படும் திட்டத்துடன், நாடு முழுதும் ரொக்கமற்ற பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக 6,000 பி.ஓ.எஸ் இயந்திரங்களையும், நாடு முழுதும் 1,000 தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்களையும் அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்தார். மேலும் பணமற்ற பரிவர்த்தனையை வளர்க்கும் விதமாக ஒருங்கிணைந்த டிக்கெட் ஆப் ஒன்றையும் மே மாதம் அறிமுகம் செய்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

“ஐஆர்சிடிசி இணையத்தில் ஒருமுறை பதிவாக ஆதார் எண் கட்டாயமாக்கப்படவுள்ளது. இதன் மூலம் போலி அடையாள அட்டைகள் மூலம் பெரிய அளவில் டிக்கெட்டுகளை பிளாக் செய்வது தடுக்கப்படும்” என்று மூத்த ரயில்வே அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதற்காக ரயில்வே மென்பொருள் ஒன்றையும் ரயில்வே துறை தயாரித்து வருகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார். மேலும் இந்த புதிய வர்த்தகத் திட்டத்தில் மலைவாசஸ்தலங்களை இணைக்க புதிய சுற்றுலா ரயில்களை அறிமுகம் செய்யவும் முடிவெடுத்துள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...