கோவை வடக்கு மண்டலத்தில் வரும் 25ஆம் தேதி சிறப்பு பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்!

கோவை வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு எண். 4, 10, 11, 21 ஆகிய பகுதிகளுக்கான சிறப்பு பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் சரவணம்பட்டி வார்டு அலுவலகத்தில் வரும் 25ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில், தங்களது சொத்து வரி விதிப்பு, குடிநீர் இணைப்பு ஆகியவற்றில் திருத்தங்களை மேற்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



கோவை: கோவை வடக்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டுகளில் சிறப்பு பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் வரும் 25ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில் முதல்முறையாக மண்டல தலைவர் வே.கதிர்வேலின் உத்தரவின் பேரில் வரும் 25 ஆம் தேதி மண்டல தலைவர் கதிர்வேல் தலைமையில் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடைபெறவுள்ளது.

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ள இந்த முகாமில், வார்டு எண். 4,10,11, 21 பகுதிகளில் உள்ள வரிதாரர்கள் தங்களது சொத்துவரி விதிப்பு, குடிநீர் இணைப்பு ஆகியவற்றில் பெயர் திருத்தம், கதவு எண் திருத்தம், தெருவின் பெயர் திருத்தம் மற்றும் முடிவுற்ற பழைய சொத்துவரி புத்தகங்களுக்கு புதிய சொத்துவரி புத்தகம் பெறலாம்.

இந்த சிறப்பு குறைதீர்ப்பு முகாமில் பெயர் திருத்தம், இனிஷியல் திருத்தம், கதவு எண் திருத்தம், தெருவின் பெயர் திருத்தம், தொலைபேசி எண் திருத்தம் மற்றும் பதிவு செய்தல் முடிவுற்ற சொத்துவரி புத்தகத்திற்கு பதிலாக புதிய சொத்துவரி புத்தகம் வழங்குதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும்.

திருத்தங்களை மேற்கொள்வதற்காக வரும் பொதுமக்கள் தங்கள் சொத்துவரி செலுத்திய ரசீது நகல் (2023-24), குடிநீர் கட்டணம் செலுத்திய ரசீது நகல் (2023-24), சொத்து தொடர்பான ஆவண நகல், இதர ஆவணங்கள் ஏதேனும் ஒரு அடையான அட்டை நகல் ஆகியவற்றை கொண்டு வரவேண்டும். பொதுமக்கள் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...