சூலூர் நீர் நிலை பகுதிகளில் வளர்ந்துள்ள உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றும் பணியில் பொதுமக்கள், பொது நல அமைப்புகள் ஈடுபட்டுள்ளனர்.

சீமை கருவேல மரங்கள் நீலத்தடி நீர் அதிகம் உருஞ்சுவதால் அதனை அகற்ற வேண்டும் என சென்னை உயர்ந்திமன்ற மதுரை கிளையில் பொது நல வழக்கு தாக்கல் செய்யபட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள் தமிழக அரசு இதனை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன.
அதன்படி கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் சூலூர் நீர் நிலை மேலான்மை குழு அமைப்புகள் என 25 குழுக்கள் கொண்ட பொதுமக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில் அலோசனை கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் நீர் நிலை பகுதிகளில் வளர்ந்துள்ள மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற முடிவு செய்யப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக இன்று காலை சூலூர் பகுதிகளில் உள்ள மரங்களை அகற்றும் பணி துவங்கியது. இப்பணிகளை ஆர்வி.எஸ் கல்வி நிறுவனங்களின் தலைவர் குப்புசாமி துவக்கி வைத்தார்.
12 ஜே சி பி 2 குழுக்களாக பிரிக்கப்பட்டு சூலூர் குளம், அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள குட்டைகள் ஆகிய பகுதிகளில் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
இப்பணியில் சூலூர் பகுதி அனைத்து அரசியல் கட்சியினர், பொது நல அமைப்பினர், பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து அனைத்து நில நீர் நிலை மேலான்மை குழுவினர் கூறும்போது தொடர்ந்து சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி தொடரும் என தெரிவித்தனர்.