கோவை குனியமுத்தூர் ஆதீசுவரர் கோவில் திருவிழா - ஏராளமான பக்தர்கள் தரிசனம்!

கோவை குனியமுத்தூர் ஆதீசுவரி உடனுறை ஆதீசுவரர் திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா திருநெறிய தமிழ்முறைப்படி கோலகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு தரிசனம் செய்தனர்.


கோவை: குனியமுத்தூர் ஆதீசுவரி உடனுறை ஆதீசுவரர் திருக்கோவில் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

கொங்குநாட்டில் 1000 ஆண்டுகள் காலம் தொன்மையுடைய இராசகேசரி பெருவழியை ஒட்டி அமைந்துள்ள குனியமுத்தூர் ஜே.ஜே.நகர் பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு காளிமுத்து அடிகளார் சிவலிங்கத்தை வழங்கினார்.



அதே பகுதியில் உள்ள விநாயகர் கோவில் வளாகத்தில் கருவறை அர்த்த மண்டபத்துடன் அமைத்து ஆதீசுவரர் என அப்பகுதி மக்கள் வழிபட்டு வந்தனர்.

இந்நிலையில் அர்த்த மண்டபம் புனரமைக்கப்பட்டு,ஆதீசுவர்ருக்கு புதிய திருமேனி செய்யப்பட்டு, விநாயகர், தென்முகப்பரமன், அண்ணாமலையார், பிரம்மா, கொற்றவை ஆகிய தெய்வங்கள் பதிட்டை செய்யப்பட்டு,அருள்மிகு ஆதிசுவரி உடனுறை ஆதீசுவரர் திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா திருநெறிய தமிழ்முறைப்படி நடைபெற்றது.

இவ்விழாவை முன்னிட்டு,கடந்த மூன்று தினங்களாக முதல் கால யாக பூஜை துவங்கி, விக்னேஸ்வர பூஜை, தன பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி மற்றும் மூன்று கால யாக பூஜைகள் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது.



இதனை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, திருக்குட நன்னீராட்டு வேள்வி பணி நடைபெற்றது. மேள வாத்தியம் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்றது. பின்னர் வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் ஒத புனிதநீர் கலசத்தில் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.



இதையடுத்து ஆதீசுவரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று, மகாதீபாரதனை காட்டப்பட்டது. விழாவில் கோவை உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த சிவனடியார்கள், சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...