தாராபுரம் அருகே விபத்தில் படுகாயம் அடைந்த நபரை மீட்டு உரிய சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அமைச்சர்.மு.பெ. சாமிநாதன் மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் ஆகியோருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
திருப்பூர்: விபத்தில் சிக்கிய நபரை காப்பாற்ற உதவிய அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் ஆகியோருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இருந்து சேலம் மாவட்டம் எடப்பாடி செல்வதற்காக நான்கு பேர் காரில் சென்றுள்ளனர்.
இந்த நிலையில் தாராபுரம் அடுத்த காங்கேயம் அருகே வந்து கொண்டிருந்த பொழுது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் இடது பக்கம் விழுந்து விபத்துக்குள்ளானது.
இதில் காரில் பயணம் செய்த இருவர் படுகாயம் அடைந்தனர். மற்ற இருவர் காயம் ஏதுமின்றி உயிர் தப்பினர்.
இந்த நிலையில் தாராபுரம் பகுதியில் அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக மக்கள் செய்தி தொடர்பு துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் ஆகியோர் அந்த வழியாக சென்றுள்ளனர்.

அப்போது அவர்கள் இருவரும் காரில் இருந்து இறங்கி விபத்தில் படுகாயம் அடைந்த நபர்களை மீட்டு 108 அவசர ஊர்தி மூலம் காங்கேயம் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் மற்றும் அமைச்சர் சாமிநாதன் ஆகியோர் சாலை விபத்தில் படுகாயம் அடைந்த நபர்களை மீட்டு உரிய சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் பரவி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அரசு விழாவிற்கு செல்ல காலதாமதம் ஆனாலும் பரவாயில்லை விபத்தில் இருந்தவரை மீட்டு உரிய சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அமைச்சர்.மு. பெ. சாமிநாதன் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர். கிறிஸ்துராஜ் ஆகியோருக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.