கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன் (39). இவர் கிழக்கு ஆரோக்கிய சாமி சாலை பகுதியில் பீடா கடை நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் இவரது கடைக்கு வந்த ஒரு கும்பல் பீடா வாங்கியது. அதற்கான பணத்தை இளங்கோவன் கேட்டதற்கு அவர்கள், தங்களை அ.தி.மு.க உறுப்பினர்கள் என்று கூறியதுடன் இளங்கோவனை தாக்கியதாக கூறப்படுகிறது. பிரச்சனை நடப்பதை அறிந்த அப்பகுதி மக்கள் தடுக்க முற்பட்டபோது அவர்களையும் தாக்கியதாக தெரிகிறது.
இது குறித்து தகவலறிந்த சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர், அ.தி.மு.க பிரமுகர் என்று கூறி பிரச்சனை செய்த செல்வபுரத்தை அடுத்த ரங்கசாமி காலனி பகுதியை சேர்ந்த முருகேசன் (40) என்பவரையும் தியாகராயர் வீதியை சேர்ந்த ஸ்ரீனிவாசன் என்பவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர்கள் இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.