கோவையில் செயல்பட்டு வரும் ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் சார்பில் பவர் பஃப் கேர்ல்ஸ் 2017 என்ற நிகழ்ச்சியை மார்ச் 3 (இன்று) மற்றும் 4 நடத்தி வருகிறது. இது மகளிர் தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நிகழ்த்தப்பட்டது.

ஸ்ரீ சக்தி பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவில் புல்லட் ஓட்டுதல், ஜீப் ஓட்டுதல், மாட்டு வண்டி ஓட்டுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் ஏராளமான மாணவிகள் கலந்துகொண்டனர்.

இன்று காலை 7 மணியளவில் 20 மாணவிகள் புல்லட் ஓட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம் தண்ணீரை சேமிப்பது, விவசாயிகளை காப்பது மற்றும் பாரம்பரிய கால்நடைகளை காப்பது ஆகியவை ஆகும். அவர்கள் மொத்தமாக 300 கிலோ மீட்டர் தூரம் பொள்ளாச்சி, பழனி ஆகிய ஊர்களின் வழியாக பயணம் செய்தார்கள்.

ஹலோ எப்எம்-யில் அறிவிப்பாளர்களாக பணியாற்றும் மகா மற்றும ரஞ்சிதா ஆகியோர் இந்நிகழ்ச்சியில் அறிவிப்பாளர்களாக செயல்பட்டனர். இதேப் கருத்தினை முன்னிட்டு மாணவிகள் ஜீப் மற்றும் மாட்டு வண்டி ஓட்டும் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றனர்.

ஜீப் ஓட்டும் பந்தயமானது வஉசி மைதாகத்தில் இருந்து துவங்கி கோவை நகர் முழுவதும் பயணித்து கல்லூரியை அடைந்தது. சின்னியம்பாளையம் கிராமத்தில் துவங்கிய மாட்டுவண்டி பந்தையம் கல்லூரி வளாகத்தில் முடிவடைந்தது.

இந்நிகழ்ச்சியில், பீரிமியர் ஸ்பின்னிங் அன்டு வீவீங் நிறுவனத்தின் இயக்குநர் சுவாதி ரோகித் கலந்துகொண்டு மாணவிகளிடையே பெண்கள் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு குறித்து உரையாற்றினார்.

தொடர்ந்து நாளை (மார்ச் 4) வாட்டர் வாலிபால் போட்டி மற்றும் நேச்சுரல்ஸ் முதன்மை செயல் அதிகாரியின் சிறப்புரை உள்ளிட்டவை நடைபெறவுள்ளது.