மதுக்கரை நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 2வது நாளாக காத்திருப்பு போராட்டம்!

தொழிலாளர்களுக்கு எதிரான நிபந்தனைகளை கொண்ட உறுதி மொழி பத்திரத்தில் கையெழுத்திடும்படி கூறும் ஒப்பந்த நிறுவனத்தை கண்டித்து மதுக்கரையில் நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 2வது நாளாக காத்திருப்பு போராட்டத்தி ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



கோவை: மதுக்கரை நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணியை புறக்கணித்து இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



கோவை மதுக்கரை நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் சுமார் 62 ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் ஒப்பந்தம் எடுத்துள்ள தனியார் நிறுவனம் ஊழியர்களுக்கு உறுதிமொழி பத்திரத்தை வழங்கி அதில் கையெழுத்திடும்படி தெரிவித்துள்ளனர். 



மொத்தம் 22 நிபந்தனைகளை கொண்ட அந்த உறுதிமொழி பத்திரத்தில் தொழிலாளர்களுக்கு எதிரான பல்வேறு அம்சங்கள் உள்ளதாக கூறி அதில் கையெழுத்திட ஊழியர்கள் மறுத்துள்ளனர். ஆனால் உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்டால் தான் வேலை செய்ய முடியும் என கூறியதால் நேற்று மதியம் முதல் 62 ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணியை புறக்கணித்து நகராட்சி அலுவலகத்திலேயே காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 



நேற்று இரவு முழுவதும் அங்கேயே உணவு சாப்பிட்டு தூய்மை பணியாளர்கள் தங்கிய நிலையில், இரண்டாவது நாளாக மீண்டும் பணியை புறக்கணித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...