கனிமவளங்களை பாதுகாக்க கோரி கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் வாகன பிரச்சாரம்!

கோவையில் இருந்து கேரளா மற்றும் பல்வேறு மாவட்டங்களுக்கும் கனிம வளங்கள் சட்டவிரோதமாக கடத்தி செல்லப்படுவதை தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை செட்டிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் வாகன பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.



கோவை: கனிம வளங்களை பாதுகாக்க கோரி கோவை செட்டிபாளையம் பகுதியில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் வாகன பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

கோவையின் கனிம வளங்களை பாதுகாக்க கோரியும், கனிம வளங்கள் எடுத்துச் செல்ல மிகப்பெரிய அளவில் வெளிப்படையான மாமுல் வசூல் செய்யப்படுவதை தடுத்து நிறுத்த கோரியும், மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பாக வாகன ஒலிபெருக்கி பிரச்சாரம் செய்ய மாவட்ட காவல்துறையிடம் அந்த இயக்கத்தினர் மனு அளித்தனர்.

ஆனால் அதற்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து கோவை செட்டிபாளையம் பகுதியில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் கனிம வளங்களை பாதுகாக்க கோரி பிரச்சார பயணத்தை துவங்கினர். 



இயக்கத்தின் தலைவர் வே.ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த பிரச்சார பயணத்தில் சமூக ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர். அப்போது பிரச்சான பயணத்தில் பேசிய வே.ஈஸ்வரன் கூறியதாவது, கோவை மாவட்டத்தில் செட்டிபாளையம், வாளையாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனிம வளங்கள் அதிக எடுக்கப்பட்டு கேரளாவிற்கும், பிற மாவட்டங்களுக்கும் அதிகளவு எடுத்துச் செல்லப்படுகிறது. 

ஒரு சில இடங்களில் விதிமீறல்களுடன் கனிமவள கொள்ளை நடைபெற்று வருகிறது. அதனை அதிகாரிகள் தடுத்து நிறுத்தவில்லை. உடனடியாக கோவையில் உள்ள கனிம வளங்களை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் கனிம வளங்களை சட்டவிரோதமாக கடத்திச் செல்ல நடைபெறும் வசூல் வேட்டைகளையும் தடுத்து நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...