ரேஷன் அரிசி கடத்தல் குறித்து இலவச தொலைபேசி எண் மூலம் புகார் அளிக்க ஏற்பாடு!

ரேஷன் அரிசி உள்ளிட்ட பொது விநியோகத்திட்ட பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் குறித்து 180059 95950 என்ற இலவச தொலைபேசி எண் மூலம் பொதுமக்கள் தங்கள் புகார்களை தெரிவிக்கலாம் என உணவு கடத்தல் தடுப்பு குற்றப்புலனாய்வு பிரிவு காவல்துறை அறிவித்துள்ளது



கோவை: கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தின் 53வது நிறுவன நாள் விழாவில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கலந்து கொண்டு மாணவர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தார். 

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் 53வது நிறுவன நாள் இன்று காலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கோவை மாவட்ட ஆட்சியர் கிரந்தி குமார் பாடி கலந்து கொண்டார். 

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்கள் C.ராமசாமி மற்றும் K.ராமசாமி ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு வந்த அனைவரையும் தமிழ்நாடு வேளான்மை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கீதாலட்சுமி வரவேற்றார்.

இந்த நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சியர் கிரந்தி குமார் பாடி சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது, மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெறும் வேளாண்மை சார்ந்த நடவடிக்கைகளுக்கு தீர்வு காண தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் உறுதுணையாக இருக்கிறது. 

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் பல்வேறு ஆட்சி மற்றும் தொழில்நுட்ப துறைகளில் பணியாற்றி நாட்டின் வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றுகிறார்கள். நாடு சுதந்திரம் பெற்ற தொடக்க காலத்தில் உணவு தேவையை சமாளிப்பது பெரும் சவாலாக இருந்தது. 

ஆனால் தற்போது விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளால் நம் நாடு தன்னிறைவு பெற்ற உணவுப் பொருட்களை வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நாடாக இருக்கிறது. தற்போதைய சூழலில் காலநிலை மாற்றம், விளைநிலங்களை தொழிற்சாலைகள் ஆக்குதல், பணியாட்கள் பற்றாக்குறை, மற்றும் யானைகள் காட்டுப் பன்றிகள் உள்ளிட்ட காட்டு விலங்குகள் போன்ற காரணிகள் வேளாண்மை வளர்ச்சிக்கு பெரும் சவாலாக உள்ளது. 

அரசாங்கத்திற்கும் விவசாயிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதிலும் பல்கலைக்கழகம் பெரும் பங்கு வகிக்கிறது. பல சிறந்த மாணவர்கள் வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பயின்று வருகிறார்கள். அவர்களை ஊக்குவிப்பதன் மூலம் அவர்களை தொழில்முனைவோர் ஆக்கலாம். 

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோவையில் அமைந்திருப்பது மிகவும் பெருமைக்குரிய விஷயம். மேலும் பல்வேறு துணை வேந்தர்களின் வழிகாட்டுதலின் கீழ் இந்த பல்கலைக்கழகம் மேலும் வளர்ச்சி அடைந்து உலகிலேயே சிறந்த ஆராய்ச்சி நிறுவனம் ஆகவேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்வில் சிறந்த ஆராய்ச்சியாளர்கள், சிறந்த பெண் விஞ்ஞானி, சிறந்த வேளாண் விரிவாக்க அலுவலர், பல்கலைக்கழகத்தில் 25 வருடங்கள் பணியாற்றிய ஊழியர்கள் போன்ற பல பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டது. இவர்களுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி விருதுகளை வழங்கினார்.

Newsletter

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...