கோவை அருகே சரக்கு ஆட்டோ மீது கார் மோதி விபத்து - பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்!

கோவை துடியலூர் அருகே வேகமாக வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்றிருந்த சரக்கு ஆட்டோ மற்றும் நடந்து சென்றவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதுகுறித்த பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: கோவை மாவட்டம் துடியலூர் அருகே நின்றிருந்த சரக்கு ஆட்டோ மீது கார் மோதும் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பாஸ்கர் சாமிதாஸ் (37). இவர் சுந்தராபுரத்தில் உள்ள தேவாலயத்தில் பாதிரியாராக உள்ளார். இந்நிலையில், அவர் தனது காரில், துடியலூர் அருகேயுள்ள மேட்டுப்பாளையம் சாலையில் சென்றுள்ளார்.



துடியலூர் அடுத்துள்ள என்.ஜி.ஜி.ஓ.காலனி கேட் அருகே வந்தபோது அவர் தூங்கியதால், கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த சரக்கு ஆட்டோவின் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அந்த சாலையில் நடந்து சென்ற நரசிம்மநாயக்கன்பாளையத்தை சேர்த்த கட்டிட தொழிலாளி சக்திவேல் படுகாயம் அடைந்தார்.



மேலும் காரை ஓட்டி வந்த பாஸ்கர் சாமிதாஸ் வலது கையில் மணிக்கட்டில் முறிவு ஏற்பட்டது. விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த துடியலூர் காவல்துறையினர் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கார் விபத்து நடைபெற்ற காட்சி அருகில் இருந்த பேக்கரி கடையில் உள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...