கோவை மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் , மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் CSW அறக்கட்டளை உலக புகையிலை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி பிஷப் அப்பாசாமி ஆசிரியர் பயிற்சி கல்லூரி மற்றும் I love Kovai உக்கடத்தில் தெருக்கூத்து நாடகம் நடைபெற்றது.
கோவை: கோவை மாவட்டத்தில் உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு தெருக்கூத்து நாடகம் நடைபெற்றது.

உலக புகையிலை எதிர்ப்பு தினம் கடந்த மே 31 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு கோவையில் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் CSW அறக்கட்டளை உலக புகையிலை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டது.

தொடர்ந்து விழிப்புணர்வு தெருக்கூத்து நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இதன் அடிப்படையில், பிஷப் அப்பாசாமி ஆசிரியர் பயிற்சி கல்லூரி மற்றும் I love Kovai உக்கடத்தில் தெருக்கூத்து நாடகம் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு நீதிபதி சிவா, DDHS துணை இயக்குநர் நேர்முக உதவியாளர் T.V. குமார், புகையிலை கட்டுப்பாட்டு மைய மாவட்ட ஆலோசகர் மரு. M. சரண்யாதேவி, சமூகப் பணியாளர் K.முரளி கிருஷ்ணன், உளவியலாளர் M. தௌபிக் முன்னிலையில் மற்றும் CSW சார்பாக பாசில் குழுவினர் கலந்து கொண்டனர்.