வால்பாறை அருகே பைக் மீது டிராக்டர் மோதி விபத்து - தந்தை, மகன் படுகாயம்!

வால்பாறை அருகேயுள்ள உருளிக்கல் எஸ்டேட் அருகே இருசக்கர வாகனத்தின் மீது எஸ்டேட் டிராக்டர் மோதிய விபத்தில், முருகாலி எஸ்டேட் பகுதியை சேர்ந்த பாலமுருகன் (42) மற்றும் அவரது மகன் சூரியா (12) ஆகிய இருவரும் கால் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.



கோவை: வால்பாறை அருகே இருசக்கர வாகனத்தின் மீது டிராக்டர் மோதிய விபத்தில் 12 வயது சிறுவன் உட்பட இருவர் படுகாயமடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வால்பாறை அடுத்த முருகாலி எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (42). இவர் அதே எஸ்டேட் பகுதியில் தொழிற்சாலையில் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், இன்று காலை பாலமுருகன் அவரது மகன் சூரியா (12) ஆகியோர் இருசக்கர வாகனத்தில் வால்பாறை நோக்கி சென்றுள்ளனர்.

இருசக்கர வாகனம் உருளிக்கள் எஸ்டேட் அடுத்த பெரியார் நகர் அருகே வந்தபோது, எதிரே வந்த உருளிக்கள் எஸ்டேட் டிராக்டர் இவர்களது இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற பாலமுருகன் மற்றும் அவரது மகன் சூரியா ஆகியோர் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில், அருகில் இருந்தவர்கள் படுகாயமடைந்தவர்களை மீட்டு, எஸ்டேட் மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளித்து பின் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.



இதில், மகன் சூரியவுக்கு தலையில் பலத்த காயமும், கால் முறிவும் ஏற்பட்டுள்ளது. மேலும் தந்தை பாலமுருகனுக்கு கால் முறிவும், கை கால்களில் காயமும் ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து சேக்கல்முடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...