காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறச்சென்ற காதலன் கத்தியால் குத்திக்கொலை - பரபரப்பு!

கோவை சுந்தராபுரம் அருகே காதலிக்கு வாழ்த்து கூறுவதற்காக சென்ற பிரசாந்த் (21) என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் பெண்ணின் வீட்டுக்கு சென்ற நிலையில், பெண்ணின் உறவினர் விக்னேஷ் (29) என்பவர் கத்தியால் குத்தியதில் பிரசாந்த் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.



கோவை: கோவை மாவட்டம் சுந்தராபுரம் அருகே காதலிக்கு பிறந்த நாள் வாழ்த்துக் கூறச் சென்ற காதலனை கத்தியால் குத்திக் கொலை செய்த பெண்ணின் உறவினரை போலீசார் கைது செய்தனர்.

கோவை சுந்தராபுரம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் என்பவரது மகன் பிரசாந்த் (21). இவர் தனியார் நிறுவனத்தில் லோடு மேனாக வேலை செய்து வந்தார். பிரசாந்த் செட்டிபாளையம் வசந்தம் நகர் பகுதியை சேர்ந்த தன்யா (19) என்ற இளம் பெண்ணை கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். 



ஆரம்பத்தில் காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். பிறகு அடுத்தாண்டு இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதாக கூறியுள்ளனர். இந்நிலையில் இன்று தன்யாவின் பிறந்த நாள் என்பதால், அவருக்கு நள்ளிரவில் வாழ்த்து கூற பிரசாந்த் தனது நண்பர்கள் மூன்று பேருடன் இருசக்கர வாகனத்தில் தன்யாவின் வீட்டிற்கு சென்றுள்ளனர். 

அப்போது நான்கு பேரும் குடிபோதையில் இருந்ததால் தன்யாவின் தந்தை மகாதேவன் (40) உறவினர் விக்னேஷ் (29) பிரசாந்தை தடுத்துள்ளனர். இதனால் விக்னேஷுக்கும் பிரசாந்துக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறிய நிலையில் பிரசாந்த் விக்னேஷை கட்டையால் தாக்கியுள்ளார்.



இதில் ஆத்திரமடைந்த விக்னேஷ் அங்கிருந்த கத்தியை எடுத்து பிரசாந்தை குத்தியுள்ளார். இதனால் சரிந்து விழுந்த பிரசாந்தை அவரது நண்பர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். 

இச்சம்பவம் தொடர்பாக செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விக்னேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

காதலிக்கு வாழ்த்து கூறச்சென்ற காதலன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...