ஊட்டி மலை ரயில் குன்னூர் ரயில் நிலையத்தில் இருந்து மேட்டுப்பாளையம் சென்றபோது மலை ரயிலில் பெட்டி ஒன்றின் 2 சக்கரங்கள் திடீரென தடம்புரண்டு தண்டவாளத்திலிருந்து கீழே இறங்கியது. இந்த விபத்தில், பயணிகள் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் தீவிரம்.
நீலகிரி: ஊட்டி மலை ரயில் பெட்டியின் 2 சக்கரங்கள் திடீரென தடம்புரண்டு தண்டவாளத்திலிருந்து கீழே இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டம் ஊட்டி மலை ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. மலை ரயில் பெட்டியின் 2 சக்கரங்கள் தண்டவாளத்திலிருந்து கீழே இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
குன்னூர் ரயில் நிலையத்தில் இருந்து மேட்டுப்பாளையம் சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. தண்டவாளத்தில் இறங்கிய பெட்டியினை சரி செய்யும் பணி நடைபெறுவதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.