கோவையில் நடக்கும் தார் சாலை பணிகள் குறித்து நகராட்சி நிர்வாக இயக்குனர் ஆய்வு!

கோவை மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் சாலை பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா, சாலைகளின் தரம் குறித்து சோதனை செய்தார். பின்னர், ஜூன் 26 ஆம் தேதி செம்மொழி பூங்கா ஒப்பந்தம் நிறைவுக்குப்பின் பணிகள் தொடங்கப்படும் என்றார்.



கோவை: கோவையின் பல்வேறு பகுதிகளில் நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா ஆய்வு மேற்கொண்டு புதிதாக போடப்பட்ட சாலைகளின் தரத்தை பரிசோதனை செய்தார்.

நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா, கோவை மாநகராட்சியின் வார்டு எண் 22-ல் உள்ள குமுதம் நகர் பகுதியில் புதிதாக போடப்பட்ட சாலைகளை ஆய்வு செய்தார். 



இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மேயர் கல்பனா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.



இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா கூறியதாவது, கோவை மாநகராட்சியில் பல்வேறு சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. 

கோவையில் பாதாள சாக்கடைகள் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி முடிய முடிய சாலைகள் போடப்பட்டு வருகிறது. இரண்டு வருட நிதியை வைத்து 563 சாலைகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளோம்.

86 கிலோமீட்டர் சாலைகள் முழுமையாக நிறைவு பெற்றுள்ளது. மற்றவைகள் பல்வேறு நிலைகளில் வேலை நடைபெற்று வருகிறது. பழுதடைந்த சாலைகள் செப்டம்பர் மாதத்திற்குள் சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். தடாகம் சாலை போடப்பட்டு வருகிறது.

கோவை மாநகராட்சியில் உள்ள நூறு வார்டுகளிலும் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நிறைவடைந்த நிலையில் சாலைகள் போடப்பட்டு வருகிறது. போடப்பட்ட சாலைகளின் தரம் குறித்து ஆய்வு செய்தோம். 

அதேபோல சூலூர் பகுதிகளில் தரம் அற்றதாக போடப்பட்ட சாலைகள் குறித்த தகவல்கள் வைத்து விசாரணை மேற்கொள்ளப்படும். ஜூன் 26 ஆம் தேதி செம்மொழிப் பூங்கா ஒப்பந்தம் போடப்படுகிறது. அதற்குப்பின் பணிகள் தொடங்கப்படும். 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...