கோவை தெற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில், பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று, பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி வரும் ஜூன் 12ஆம் தேதி திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறையின் சார்பாக மனு கொடுக்க உள்ளதாக அறிவிப்பு.
கோவை: பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,

பூரண மதுவிலக்கு என்பதை நாம் தமிழர் கட்சி கொள்கையாக கொண்டுள்ளது. அதன் அடிப்படையில் வரும் ஜூன் 12ஆம் தேதி திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பூரண மதுவிலக்கு கோரி, பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று மகளிர் பாசறையின் சார்பாக மனு கொடுக்க உள்ளோம்.

எனவே தானியங்கி பிரச்சார வாகனம் மூலம் பொதுமக்களிடம் கையெழுத்து பெற அனுமதி கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இதனால் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் வராது என்பதை உறுதீபட தெரிவித்துக் கொள்கிறோம்.
மாவட்ட, தொகுதி பொறுப்பாளர்கள் இதுபோல வழிமுறையை பின்பற்றுங்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.