மத்திய பாஜக அரசை கண்டித்து இந்திய கம்யூ. கட்சி நாடு தழுவிய பிரச்சார இயக்கம்!

மத்திய பாஜக அரசை கண்டித்தும், அதனை ஒன்றிய ஆட்சியில் இருந்து அகற்ற வலியுறுத்தியும், நாட்டையும் மக்களையும் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நாடு தழுவிய பிரச்சார இயக்கம் நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை கவுண்டம்பாளையத்தில் இன்று காலை 9 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

கோவை: மத்திய பாஜக அரசை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்ற முழக்கத்துடன் கோவை கவுண்டம்பாளையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பிரச்சார இயக்கம் இன்று காலை தொடங்கியுள்ளது.

இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு ஆட்சிக்கு வந்து 9 ஆண்டுகள் கடந்துவிட்டது. ஒன்றிய ஆட்சியை‌ கைப் பற்றுவதற்கு முன்னர்‌ மோடியும்‌. பாஜகவும்‌ ஏராளமான வாக்குறுதிகளை. தாராளமாக வழங்கி மக்களுக்கு நம்பிக்கையூட்டினர்‌. கார்ப்பரேட்‌ ஆதரவுடன்‌ அவர்கள்‌ நடத்தும்‌ ஆட்சி காற்றடித்த பலூன்‌ போல காட்சியளித்து, இன்று நெருக்கடியில்‌ வெடித்துச்‌ சிதறி வருகிறது.

வீட்டுக்கு ரூபாய்‌ 15 லட்சம்‌ என்றார்‌. 15 ரூபாய்‌ கூட தரவில்லை. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை என்றார்‌. ஏற்கனவே இருந்த பல கோடி வேலைகள்‌ பறித்து வீதியில்‌ நிறுத்தப்பட்டுள்ளனர்‌. கருப்புப்‌ பணத்தை ஒழிப்பேன்‌ என்றார்‌. இப்போது கள்ளப் பணம்தான்‌ ஆட்சியை நடத்துகிறது.

பயிர்‌ வைக்க விவசாயி செலவழித்த பணத்தைக்‌ காட்டிலும், இரண்டு மடங்கு அதிகமாக விலை கிடைக்கச்‌ செய்வேன்‌ என்றார்‌. உள்ள உரிமைகளையும்‌ பறித்து வேளாண்‌ வணிகச்‌ சட்டங்கள்‌ இயற்றியதால்‌. 700 பேர்‌ உயிரை‌ பலி கொடுத்து விவசாயிகள்‌ ஓராண்டுக்கும்‌ மேலாக தொடர்ந்து போராடி தான் சட்டத்தை முறியடிக்க நேரிட்டது.

150 ஆண்டுகள்‌ போராடி‌ பெற்ற தொழிலாளர்களின்‌ உரிமைகள்‌ அனைத்தையும்‌ பறித்து. நான்கு சட்டத்‌ தொகுப்புகளை மோடி அரசு வெளியிட்டுள்ளது. இனி நிரந்தரத்‌ தொழிலாளர்‌ யாரும்‌ இல்லை, அன்றாடக கூலிகள்‌ மட்டுமே மிஞ்சுவார்கள்‌ என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.

450 ரூபாய்க்கு விற்ற சமையல்‌ வாயு சிலிண்டர்‌ ரூ.1150 ஆக உயர்ந்து விட்டது. பெட்ரோல்‌ விலை 100 ரூபாயை‌ தாண்ட, டீசல்‌ அதனை எட்டிப்‌ பிடிக்கீறது. இதனால்‌ அத்தியாவசியப்‌ பொருட்கள்‌ உள்ளிட்ட அனைத்துப்‌ பொருட்களின்‌ விலைகளும்‌. தாறுமாறாக உயர்ந்து செல்கிறது.

மருத்துவமும்‌, கல்வியும்‌ வணிகப் பொருளாகி விட்டன. கையில்‌ பெரும்‌ பணம்‌ இல்லை என்றால்‌ படிப்பும்‌ இல்லை, உயிரும்‌ இல்லை என்றாகி விட்டது. மோடி அரசின்‌ ஆதரவில்‌ அதானி. அம்பாணி கும்பல்‌ நாட்டைச்‌ சூறையாடுகின்றனர்‌.

75 ஆண்டுகளாக மக்கள்‌ வரிப்பணத்தில்‌ உருவாக்கிய துறைமுகங்கள்‌. விமான நிலையங்கள்‌, விமானங்கள்‌. நெடுஞ்சாலைகள்‌. ரயில்கள்‌. ராணுவ ஆயுத‌ தொழிற்சாலைகள்‌ அனைத்தையும்‌ ஏறக்குறைய இலவசமாகவே தனியார்‌ கார்ப்பரேட்களுக்கு‌ தாரை வார்க்கிறார்‌.

மோடியினால்‌ ஊட்டி வளர்க்கப்‌ பட்ட அதானியின்‌ சாம்ராஜ்யம்‌ ஹிண்டன்பர்க்‌ ௮றிக்கையினால்‌ ஆட்டம்‌ கண்டுள்ளது. 581,016 தொழிலாளர்களின்‌ வருங்கால வைப்பு நிதி, மக்களின்‌ பணம்‌ பல்லாயிரம்‌ கோடிகள்‌ அதானி குடும்பத்திற்கு அள்ளி வழங்கப் பட்டுள்ளது.

இவற்றைப்‌ பற்றி பேச வாய்‌ திறந்தால்‌ . மதம்‌. சாதி பெருமைப்‌ பேசி, வெறியூட்டி. கலவரங்கள்‌ உருவாக்கி, நடத்தும்‌ மனித‌ படுகொலைகள்‌ மூலம்‌ வாயை அடைக்கிறார்கள்‌. கவனத்தை திசை திருப்புகிறார்கள்‌.

மதவறி பாசிசத்தில்‌ இருந்தும்‌ ஊழல்‌ அடிமைத்தனத்திலிருந்தும்‌ அன்னை பூமியை மீட்க வேண்டும்‌. மத நல்லிணக்கமும்‌, சமூக நீதியும்‌ நிலை பெற வேண்டும்‌. மக்கள்‌ சமூகத்துக்கு பயனளிக்கும்‌ வகையில்‌ தொழில்‌ பொருளாதார கொள்கைகள்‌ கட்டமைக்கப்பட வேண்டும்‌. 

வேலை வாய்ப்புகளை கூடுதல்‌ ஆக்கிட, தொழிலாளர்களின்‌ சட்ட உரிமைகள்‌ பாதுகாக்கப்பட, விவசாயிகள்‌. உழைப்பாளர்கள்‌ நலன்‌ காக்கப்பட, விழிப்புணர்வு பெற்று மக்கள்‌ ஒன்றுபடுவது காலத்தின்‌ அவசியம்‌.

கார்ப்பரேட்‌ முதலாளித்துவ ஆதரவு மற்றும்‌ மதவெறி கொள்கையை‌ கொண்ட பாஜக, நரேந்திர மோடி ஆட்சியைத்‌ தூக்கி எறிவோம்‌. அனைத்து மதசார்பற்ற ஐனநாயக சக்திகளின்‌ ஒற்றுமையின்‌ மூலமே மாற்றத்தை உருவாக்க முடியும்‌.

எல்லோருக்கும்‌ எல்லா வாய்ப்பும்‌ கிடைக்கும்‌ சோசலிச இந்தியாவை உருவாக்கவும்‌ முடியும்‌ என்று மக்களின்‌ நலனுக்காகப்‌ போராடும்‌ கட்சியான இந்திய‌ கம்யூனிஸ்ட்‌ கட்சி உறுதியாக நம்புகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...