பாலியல் துன்புறுத்தலால் 12ஆம் வகுப்பு மாணவி தற்கொலை வழக்கு - கைதான அர்ச்சனாவுக்கு ஜாமீன்!

கோவையில் பாலியல் துன்புறுத்தலால் 12ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கைதான ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியின் மனைவி அர்ச்சனாவிற்கு கோவை போக்சோ நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.



கோவை: பாலியல் துன்புறுத்தலால் 12ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கைதான அர்ச்சனாவுக்கு ஜாமீன் வழங்கி கோவை போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவையில் தனியார் பள்ளி ஒன்றில் 12ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி 2021ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணிபுரிந்து வந்த மிதுன் சக்கரவர்த்தி என்பவர் கொடுத்த பாலியல் துன்புறுத்தல் காரணமாக மாணவி கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அந்தக் கடிதத்தில் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி தவிர தனக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த நபர்களின் பெயர்களையும் குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில் கோவை மேற்கு அனைத்து மகளிர் காவல் துறையினர் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி, பள்ளியின் தலைமை ஆசிரியர் மீரா ஜாக்சன், மாணவியின் வீட்டின் அருகில் வசித்து வந்த மனோஜ் ராஜ் மற்றும் முகமது சுல்தான் ஆகியோரை கைது செய்தனர்.

இந்த வழக்கு கோவை போக்சோ நீதிமன்றத்தில் கடந்த இரண்டு வருடங்களாக நடந்து வந்தது. விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அரசு தரப்பில் மேலும் சிலரை கைது செய்யப்பட வேண்டி இருப்பதாக கூறி கடந்த மாதம் நீதிமன்றத்திடம் அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்திருந்தனர்.

நீதிமன்றம் அனுமதி வழங்கி இருந்த நிலையில், இந்த வழக்கு குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த மேற்கு அனைத்து மகளிர் காவல் துறையினர், ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியின் மனைவியான அர்ச்சனாவை கைது செய்தனர்.

தற்கொலை செய்து கொண்ட மாணவியின் செல்போன், காவல் துறையினரால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அதில் டெலிட்டாகி இருந்த ஆடியோ அனைத்தும் தொழில்நுட்ப குழுவினரால் மீட்கப்பட்டதில், பாலியல் துன்புறுத்தல் காரணமாக பாதிக்கப்பட்ட மாணவி, ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியின் நடவடிக்கை குறித்து அவரது மனைவியான அர்ச்சனாவிடம் தெரிவித்து இருப்பதும், தொழில் நுட்ப குழுவினரால் மீட்கப்பட்டது.

பள்ளி மாணவி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டது தெரிந்தும் காவல்துறையிடம் தெரிவிக்காததால் அர்ச்சனாவையும் போக்சோ சட்டத்தில் கைது செய்த அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், அவரை  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், கைதான ஆசிரியர் அர்ச்சனா சார்பில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இதை விசாரித்த நீதிமன்றம் அர்ச்சனாவிற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. 

15 நாட்களுக்கு ஒருமுறை மேற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியுள்ளது. 

இந்த வழக்கில் கைதான அனைவரும் தற்போது ஜாமினில் வெளியே உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...