வால்பாறையில் தனியார் எஸ்டேட் நிர்வாகத்தை கண்டித்து விசிக ஆர்ப்பாட்டம்!

வால்பாறை அருகே வெல்லமலை எஸ்டேட் நிர்வாகத்தை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் சுமார் 100க்கும் மேற்பட்டவர் கையில் கொடி ஏந்தி எஸ்டேட் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களையும் எழுப்பினர்.


கோவை: வால்பாறை அருகேயுள்ள வெல்லமலை எஸ்டேட் நிர்வாகத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை மாவட்டம் வால்பாறை அருகே வெல்லமலை எஸ்டேட் நிர்வாகத்தை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் சுமார் 100க்கும் மேற்பட்டவர் கையில் கொடி ஏந்தி எஸ்டேட் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்த போராட்டத்தில், எஸ்டேட் தொழிலாளர்கள் வீட்டில் வளர்க்கப்படும் பட்டர் ஃப்ரூட் மரங்களில் உள்ள பழங்களை தொழிலாளர்கள் பறித்து உபயோகம் செய்ய விடாமல், எஸ்டேட் நிர்வாகம் பறித்து விற்பனை செய்து வருகிறது. இதை கைவிட வேண்டும்.

தேயிலை காடுகளில் தேயிலைச் செடிகளை மூடி கிடக்கும் செடி, கொடிகள் மற்றும் கலைகளை அகற்றி பவுண்டரி லைன் மற்றும் வெட்டுச்சால் வெட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய விடுப்பு சம்பளத்தை உடனடியாக வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.



தொழிலாளர்கள் குடியிருப்புகளில் குடியிருப்புடன் இணைந்த கழிவறை வசதி செய்து தர வேண்டும். மரத்தாலான தடுப்புகளுக்கு பதிலாக கான்கிரீட் சுவர் கட்டித் தர வேண்டும்.



வெள்ளைமலை டாப் டிவிஷன் சூப்பர்வைசர் தினசரி ஆள் கணக்கு பட்டியலில் வேலைக்கு வராத தொழிலாளர்களின் பெயர்களை தினசரி திருட்டுப் பெயர் போட சொல்லி உழைப்பு சுரண்டல் செய்யும் விஜயன் மற்றும் லியோவை கம்பெனியிலிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காஞ்சமலை வடக்கு டிவிஷனில் பி.கே.டி கம்பெனியில் பணம் இல்லை ஒப்பந்தம் அடிப்படையில் இன்சென்டிவ் கொழுந்து பறித்து கொடுங்கள் நான்கு ரூபாய் உங்களுக்கு ஒரு ரூபாய் எங்களுக்கு என்று கம்பெனியை பெயரை சொல்லி தொழிலாளர்களிடம் பேசி உழைப்பு சுரண்டலில் ஈடுபட்டு காண்டிராக்டராக நடந்து கொண்டிருக்கும் விஜயன் மற்றும் சிவா கம்பெனியிலிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

விடுதலை சிறுத்தை கட்சி மற்றும் ஆனைமலை அம்பேத்கர் தோட்ட மக்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், விடுதலை சிறுத்தை கட்சி சங்கத் தலைவர் வீரமணி மற்றும் வேல்முருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் எஸ்டேட் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...