ஈரநெஞ்சம் அறக்கட்டளை சார்பில் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது


சர்வதேச அளவில் பெண்களை போற்றுவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட மார்ச் எட்டாம் நாளில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது . இந்த மகளிர் தினத்தில் பொருளாதாரம் , அரசியல் , மற்றும் சமூகரீதியில் சாதனை புரிய முயலும் பெண்கள் மீது மரியாதை, மதிப்பு, அன்பு, ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் 1921ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.

கோவை, ஆர்.எஸ் புரம், மேற்கு ஆரோக்கியசாமி சாலையில் உள்ள ஈரநெஞ்சம் அறக்கட்டளை பராமரித்து வரும் மாநகராட்சி பெண்கள் முதியோர் காப்பகத்தில் நேற்று உலக மகளிர் தினத்தை முன்னிட்டு வாழ்வில் மாற்றுத்திறனுடன் உழைத்து போராடும் பெண்களை போற்றும் வகையில் மகளிர் தினம் விழா ஈரநெஞ்சம் அறக்கட்டளை சார்பில் கொண்டாடப்பட்டது. இதில் சுயதொழில் செய்யும் மாற்றுத்திறனாளி பெண்களை ஊக்குவிக்கும் வகையில் ஐந்து மாற்றுத்திறனாளி பெண்களுக்கு அவர்களின் விருப்பத்திற்கேற்ப தையல் மிஷின், கிரைண்டர், ஆடு மற்றும் பெட்டிகடைகள் வழங்கப்பட்டது. பின்னர் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.



அதில் மாற்றுத்திறனாளிகளாக இருந்து தங்கள் குடும்பத்தை காப்பாற்ற அயராது உழைத்து  குடும்பத்தை தாங்கி வரும்   ஐந்து பெண்களை தேர்ந்தெடுத்து  அவர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும்  அவர்களது வாழ்வாதார மேம்பாட்டிற்கு தேவையான பொருள் உதவி வழங்கி பாராட்டி கௌரவித்துள்ளது ஈரநெஞ்சம் அறக்கட்டளை.

கோவை சென்னனுர் சேர்ந்தவர் சரோஜினி வயது 35. திருமணம் ஆகாதவர்  போலியோவால் பாதிக்கப்பட்டவர் ஒரு கை, கால் குறை பாடுடையவர். பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார் . தனது சகோதரி வீட்டில் இருந்தபடி  ஊர் பொது மக்களுக்கு தேவையான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வாழ்ந்து வருகிறார். அவரது வேண்டுகோளுக்கு இணங்க  தொழில் செய்ய பெட்டிக்கடை வைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.



கோவை உளியம்பாளையம் பகுதியை சேர்ந்த லதா வயது: 40  திருமணம் ஆகாதவர் . போலியோவால் பாதிக்கப்பட்டவர் ,  தனது தந்தை மறைவுக்கு    தையல் வேலைக்கு சென்று  தனது தாயாரை காப்பாற்றி வருகிறார். அவரது வேண்டுகோளுக்கு இணங்க அவருக்கு தையல் எந்திரம் வழங்கியுள்ளது.



கோவை  ஆலந்துறை பகுதியை சேர்ந்த சரஸ்வதி வயது 30 திருமணம் ஆகாதவர் . முதுகு தண்டுவடம் முதல் கால்கள் இரண்டும் போலியோ நோயால் பாதிக்கப்பட்டவர் . தினக்கூலிக்கு காட்டு வேலைக்கு சென்று வயதான தாய் தந்தையரை காப்பாற்றி வருகிறார். அவரது வேண்டுகோளுக்கு இணங்க இரண்டு ஆட்டு குட்டிகள் வழங்கியுள்ளது.



கோவை செட்டிப்பாளையம் சேர்ந்த உஷா வயது 42  போலியோ நோயால் பாதிக்கப்பட்டவர் மாற்றும்    கணவரால் கைவிடப்பட்டவர்  கூலிவேலை செய்து தனது மகன் மற்றும் வயதான தந்தையை காப்பாற்றி வருகிறார். அவரது வேண்டுகோளின் படி தையல் எந்திரம் வழங்கியுள்ளது.

கோவை ரத்தினபுரி பகுதியை சேர்ந்தவர் மாலா வயது 33 போலியோ நோயால் பாதிக்கப்பட்டு இரண்டு கால்களும் செயல் இழந்தவர். அப்பளம் தயாரித்து தனது குழந்தைகளை காப்பாற்றி வருகிறார் . அவரது வேண்டுகோளின் படி மாவு அரைக்கும் எந்திரம்  வழங்கியுள்ளது.



சாதனை படைப்பவர்கள் மட்டும் அங்கீகாரத்திற்கும் பாராட்டிற்கும் தகுதியானவர்கள்  என்றால் .  தனது ஊனத்தை பொருட்படுத்தாமல் உழைத்து தனது குடும்பத்தை காப்பாற்றும் இப்படி பட்ட தேவதைகளை என்ன வென்று சொல்வது. இவர்களை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டியது ஏராளம் உள்ளது.





'இந்த விழாவில் மைக்கேல் ஜாப் ஆதரவற்ற பள்ளி மாணவிகள். ஆராதனா நடனப்பள்ளி மாணவிகள், தொல்கலை , மற்றும் அனுஷா நாட்டியம்  தடம் அமைப்பு, கலந்துக் கொண்டது. மேலும்  இவர்களுக்காக உதவிய  அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் ஈரநெஞ்சம் அறக்கட்டளை சார்பாக வாழ்த்துக்களும் நன்றிகளும் தெரிவித்துக் கொள்கிறோம்', என ஈர நெஞ்சம் அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் மஹேந்திரன் தெரிவித்தார்.





Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...