ஜூலை 9-ல் பாஜக நடைபயணத்தின் போது வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் - பாஜக தலைவர் அண்ணாமலை தகவல்!

நாம் தமிழர் கட்சியும் பாஜகவும் கொள்கை ரீதியில் வேறுபட்டு இருந்தாலும் தமிழகத்தில் ஊழலில்லா ஆட்சியை அமைக்க வேண்டும் என்பதில் ஒரே கோட்டில் பயணிக்கிறது. வரும் ஜூலை 9ஆம் தேதி பாஜகவின் நடைப்பயணத்தில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என கூறினார்.



திருப்பூர்: வரும் ஜூலை 9ஆம் தேதி பாஜகவின் நடைப்பயணத்தில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் 53 ஆண்டுகளுக்கு முன் மின் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி போராடிய 3 விவசாயிகள் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தனர். 



அவர்களின் 54வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பெருமாநல்லூர் பகுதியில் உள்ள விவசாயிகள் நினைவு ஸ்தூபியில் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 

அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் அண்ணாமலை பேசியதாவது, 







ஒரு பைசா மின் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி போராடிய விவசாயிகள் திமுக ஆட்சி காலத்தில் சுட்டுக் கொல்லப்பட்டனர். அப்போது கலைஞர் துப்பாக்கியில் இருந்து தோட்டக்கள் வராமல் பூக்களா வரும் என கேள்வி எழுப்பினார்.

அப்போது இருந்த திமுகவும் இப்போது இருக்கும் திமுகவும் இன்னும் மாறாமல் அதே நிலையில் தான் இருக்கிறது. ஆனால் இலவச மின்சாரத்தை பாரதிய ஜனதா எப்போதும் ஆதரிக்கிறது பாரத பிரதமர் மோடி அதனை ஒருபோதும் கைவிட மாட்டார். ஏனென்றால் விவசாயம் முக்கியமானது என்பதை பாஜக அறிந்திருக்கிறது. 

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த பெருமாநல்லூரை சேர்ந்த மூன்று விவசாயிகள் மட்டுமல்லாது வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு போராட்டங்களில் உயிர் நீத்த 46 விவசாயிகளுக்கும் மணிமண்டபம் கட்ட வேண்டும்.

ஜூலை ஒன்பதாம் தேதி பாஜக சார்பில் தொடங்கப்பட உள்ள நடைபயணத்தில் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட உள்ளது. பாஜக கள்ளுக் கடைகளை முழுவதாக ஆதரிக்கிறது. அடுத்த மூன்று ஆண்டுகளில் விவசாயத்தை ஊக்குவிப்பதற்கான திட்டங்கள் இந்த அறிக்கையில் இடம்பெறவுள்ளன.

பனைமரம் மற்றும் தென்னை மரங்களை பாதுகாப்பதன் மூலம் ஒரு லட்சம் கோடி வருவாய் ஈட்டக்கூடிய வழிமுறைகளை அதில் வெளியிட இருக்கிறோம். வெறும் அறிக்கைகளை வெளியிடுவது மட்டுமல்லாமல் அதை செயல்படுத்தும் வகையில் பாஜக செயல்படும்.

புதுக்கோட்டையில் உதயநிதி ஸ்டாலின் கூறிய பொய்யை மக்கள் இன்னும் ஏற்க தயாராக இல்லை. ஜல்லிக்கட்டு போட்டிக்காக நாம் நன்றி சொல்ல வேண்டுமென்றால் அது பாரத பிரதமர் மோடி ஒருவருக்கு மட்டுமே.

அடுத்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிக்கு பிரதமரை நேரில் அழைத்து வந்து சிறப்பு செய்யப்படும். நேற்றைய தினம் திமுக பொதுக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஏ.வ.வேலு பீகாரில் இருந்து எல்லாரும் பிழைப்பு தேடி தமிழகம் வருவதாகவும் அது போல தான் ஆளுநரும் வந்திருப்பதாக கொச்சைப்படுத்தி பேசி உள்ளார். 

ஆனால் நாளைய தினம் கலைஞர் கோட்டத்தை திறந்து வைக்க பீகார் முதல்வரை தான் அழைத்து வந்திருக்கிறார்கள். இதன் மூலம் திராவிட மாடல் அரசின் இரட்டை வேடம் தெரிய வந்துள்ளது. 

பொன்முடி மீதான ஊழல்வழக்கை விசாரிக்க தடை இல்லை என நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. ஏற்கனவே செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை கட்டுப்பாட்டில் இருக்கிறார்.

இன்னும் ஓராண்டிற்குள் தமிழக அமைச்சரவையில் முதல்வர் மட்டுமே எஞ்சி இருக்கக்கூடிய நிலை ஏற்படும். ஆனால் முதல்வர் மீதும் சிபிஐ-யில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சியும் பாஜகவும் கொள்கை ரீதியில் வேறுபட்டு இருந்தாலும் தமிழகத்தில் ஊழல் இல்லாத ஆட்சியை கொண்டுவர ஒரே கோட்டில் பயணிக்கிறது. பாஜகவில் இதுவரை எம்எல்ஏக்கள், எம்பிக்கள் இருந்திருக்கின்றனர். தற்போதும் எம்எல்ஏக்கள் உள்ளனர்.

இவர்களில் யார் மீதாவது ஊழல் குற்றச்சாட்டு உள்ளதா என்பதை தெரிவிக்க வேண்டும். எனவே பாஜகவில் அனைத்து மட்டத்திலும் ஊழல் அற்றவர்களாக பதவியில் இருக்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.



இதனுடைய அண்ணாமலை வருவதற்கு முன்பாக அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரச்சார வாகனம் மற்றும் ஒலிபெருக்கி வழங்க மறுத்து, காவல்துறையினர் பாஜகவினரை தரக்குறைவாக பேசியதாக குற்றம் சாட்டி கோவை ஈரோடு தேசிய நெடுஞ்சாலையில் கட்சியினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 



இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது தொடர்ந்து காவல்துறையினர் பாஜகவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து போராட்டத்தை கைவிட்டனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...