பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக கோவைக்கு வருகை தந்த அமைச்சர் காந்தி, குறிச்சி சிட்கோ தமிழ்நாடு பஞ்சாலை கழக தறிக்கூடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கருவிகளின் செயல்பாடுகள் மற்றும் நூல்களின் தரங்கள் குறித்தும் ஆய்வு செய்தார்.
கோவை: கோவை மாவட்டம் குறிச்சியில் உள்ள தமிழ்நாடு பஞ்சாலை கழக தறிக்கூடத்தில், கைத்தறி துறை அமைச்சர் காந்தி ஆய்வு மேற்கொண்டார்.
கோவையில் இன்று நடைபெறவுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி கலந்து கொள்கிறார். இதன் ஒரு நிகழ்வாக குறிச்சி சிட்கோ தமிழ்நாடு பஞ்சாலை கழக தறிக்கூடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது, அங்குள்ள கருவிகளை பார்வையிட்டு அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் அங்கு வைக்கப்பட்டுள்ள நூல்களின் தரங்களையும் ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வில் துறையின் முதன்மை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், துணிநூல் துறையின் ஆணையர் வள்ளலார், மாநகராட்சி துணை ஆணையர் வெற்றிச்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து தனியார் நட்சத்திர ஹோட்டலில் துணி நூல் துறையின் சார்பில் தொழில்நுட்ப ஆலோசனை கூட்டம் அமைச்சர் தலைமையில் நடைபெற உள்ளது.