கோவை திருச்சி சாலையில் அடுத்தடுத்து இருந்த துணிக்கடை, கார் உதிரி பாகங்கள் விற்பனையகம் மற்றும் டயர் கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.

கோவை திருச்சி சாலையில் சங்கர் என்பவருக்கு சொந்தமான துணிகள் மற்றும் கைத்தறி பொருட்கள் விற்பனையகம் செயல்பட்டு வருகிறது. இன்று காலை சுமார் 10 மணியளவில் கடை திறக்கப்படுவதற்கு முன்பாக கடையில் இருந்து புகை வருவதை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
5 வாகனங்களில் அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் அக்கடையின் அருகில் இருந்த இண்டோ கார்ஸ் என்ற கார் உதிரிபாகங்கள் விற்பனையகம் மற்றும் சுந்தரம் டயர்ஸ் என்ற டயர்கள் விற்பனை கடையிலும் தீ வேகமாக பரவியது கண்டறியப்பட்டது.
தீயணைப்புத் துறையினர் நடத்திய விசாரணையில் அக்கட்டிட உரிமையாளர் புகழேந்தி, கட்டிடத்தின் ஒரு பகுதியில் தீபாவளி விற்பனைபோக மீதமான பட்டாசுகளை அங்கு சேமித்து வைத்திருந்தது தெரியவந்தது. அங்கிருந்த சில பட்டாசுகள் வெடித்து சாலையில் வந்து விழுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீவிபத்தில் துணிக்கடையில் வைக்கப்பட்டிருந்த 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களும், கார் உதிரிபாக விற்பனையகத்தில் இருந்த 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களும் முற்றிலும் எரிந்து நாசமானது. பட்டாசுகள் சேமித்து வைத்திருந்த பகுதியில் ஏற்பட்ட தீயே இந்த விபத்திற்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தீ விபத்தில் அதிர்ஸ்டவசமாக உயிர்சேதம் ஏதும் ஏற்படாத போதும், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.