உடுமலையில் ரஜேந்திரா ரோட்டில் வாகனங்கள் நிறுத்த அனுமதி வழங்க சி.ஐ.டி.யு கோரிக்கை!

உடுமலை வார சந்தைக்கு எதிரே ராஜேந்திரா ரோட்டில் வாடகை வாகனங்கள் நிறுத்தக்கூடாது என நகராட்சி அதிகாரிகள் கூறியதால், வாழ்வாதாரம் இழந்துள்ள வாடகை வாகன ஓட்டுனர்கள், மீண்டும் அதே இடத்தில் வாகனங்களை நிறுத்த அனுமதி வழங்க வேண்டும் என சி.ஐ.டி.யு கோரிக்கை விடுத்துள்ளது.



திருப்பூர்: உடுமலை அருகே ராஜேந்திரா ரோட்டில் வாடகை வாகனங்களை நிறுத்த அனுமதி வழங்க வேண்டும் என சி.ஐ.டி.யு கோரிக்கை விடுத்துள்ளது. 

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை நகராட்சியில் வாரச்சந்தைக்கு எதிர்ப்புறம் உள்ள ராஜேந்திரா ரோட்டில் கடந்த 30 ஆண்டுகளாக மினிடோர், டூரிஸ்ட் கார், வேன், டெம்போ உள்பட 100க்கும் மேற்பட்ட நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தி வாடகைக்கு ஓட்டி தங்களது வாழ்வாதாரத்தை பாதுகாத்து வருகின்றனர். 

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த இடத்தில் போக்குவரத்து நெருக்கடி உள்ளது. எனவே வாகனங்களை அப்புறப்படுத்தி வேறு இடத்தில் நிறுத்த வேண்டும் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

இதைத்தொடர்ந்து அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் சி.ஐ.டி.யு சங்கத்தின் தலைமையில் ஒன்று சேர்ந்து உடுமலை நகர மன்ற தலைவர் மு.மத்தீனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சுவார்தையில் ஏற்கனவே உள்ள அதே இடத்தில் தொடர்ந்து வாகனங்களை நிறுத்திக் கொள்வது என்றும், சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் வாகனங்களை சீராக முறைப்படுத்தி நிறுத்திக்கொள்வது என்றும் பேசி முறைப்படுத்தப்பட்டது.

இப்பேச்சுவார்த்தையில் CITU நிர்வாகிகள் தண்டபாணி, மதுசூதனன், பஞ்சலிங்கம், சுதா சுப்பிரமணியம்,இயேசு ராஜ், தோழர் ராஜா உள்பட வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

Newsletter

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...