கல்குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர கோரி பாஜக மனு!

கல்குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வேலை நிறுத்தத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி கோவை தெற்கு மாவட்ட பாஜக தலைவர், வசந்தராஜன் தலைமையில் பாஜகவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



கோவை: கல்குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தி கோவை மாவட்ட பாஜக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.



கல்குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வேலை நிறுத்தத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வரக் கோரி கோவை தெற்கு மாவட்ட பாஜக தலைவர், வசந்தராஜன் தலைமையில் பாஜகவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



அந்த மனுவில் கூறியிருப்பதாவது, கடந்த 10 நாட்களாக கிரஷர் மற்றும் கல்குவாரி நிறுவனங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால் கோவையில் கட்டுமான வேலைகள் ஸ்தம்பித்துள்ளன. பல லட்சம் கூலித் தொழிலாளர்கள் வேலை இழந்து இருக்கிறார்கள்.

இதற்கு மிகவும் முக்கிய காரணமான கேரளாவிற்கு கடந்த 2 ஆண்டுகளாக சுமார் ஒரு கோடி யூனிட் அளவிற்கு கோவையின் கனிம வளம் முறைகேடாக மாபியாக்கள் துணையுடன் கடத்தப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.

தினமும் கோவையில் உற்பத்தியாகும் கனிம வளங்கள் முறைகேடாக 90% மாபியாக்களின் துணையுடன் கேரளாவிற்கும், 10% மட்டுமே கோவைக்கும் எடுத்துச் செல்லப்படுகிறது. இதை பலமுறை நாங்கள் அரசாங்கத்திடம் எடுத்துக் கூறியும் போராட்டங்கள் நடத்தியும் அரசு கண்டுகொள்ளவில்லை.

அதன் விளைவு தற்போது ஒவ்வொரு குவாரிகளுக்கும் பல கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது கண் கெட்டதுக்கு பின்பு சூரிய நமஸ்காரம் செய்வது போல உள்ளது. கேரளாவில் நமது கனிம வளங்கள் பெருமளவில் Stock வைத்திருக்கிறார்கள்.



தற்போது வேலை நிறுத்தத்தால் கேரளாவிற்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை. ஆனால் நம் கோவையில் ஒரு யூனிட் ஜல்லி, MSAND கூட STOCK இல்லை. நம்மிடம் கேரளாவிற்கு ஒரு யூனிட் 2000 ரூபாய்க்கு வாங்கி கடத்திச் செல்லப்பட்ட கனிம வளம் தற்பொழுது நம்மிடம் ஒரு யூனிட் ருபாய் 5000 வரை திருப்பி விற்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

75 ஆண்டுகளாக எடுக்கப்பட்ட கனிமவளத்தை விட அதிகமாக கடந்த இரண்டு ஆண்டுகளில் மாபியாக்களால் சுரண்டப்பட்டு கேரளாவிற்கு முறைகேடாக விற்கப்பட்டிருக்கிறது. கல்குவாரி மற்றும் கிரஷர் வேலை நிறுத்தத்தால் பொதுமக்களும் மற்றும் கட்டிட கூலித் தொழிலாளர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

தாங்கள் உடனடியாக கிரஷர் மற்றும் கல்குவாரி, லாரி உரிமையாளர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதற்கு மூல காரணமாக இருக்கும் கேரளாவிற்கு கனிம வள கடத்தலை தடுத்து நிறுத்தி கோவையை வறட்சியிலிருந்தும் வளங்களையும் கோவையையும் பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...