குடும்ப பிரச்சினையில் மகனுக்கு எலி மருந்து கொடுத்துவிட்டு தாய் தற்கொலை - பாட்டி மருத்துவமனையில் அனுமதி!

தாராபுரம் அடுத்த கன்னிவாடியில் குடும்ப பிரச்சினை காரணமாக 4 வயது மகனுக்கு எலி மருந்து கொடுத்துவிட்டு தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், பாட்டி உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: தாராபுரம் அருகே குடும்ப பிரச்சினை காரணமாக 4 வயது மகனுக்கு விஷம் கொடுத்துவிட்டு, தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த கன்னிவாடி மேற்குத் தெருவில் சுப்பிரமணியன் என்பவரது வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வருபவர் கூலித் தொழிலாளி ஜோதிபாசு. இவர் தனது மனைவி நேசவள்ளி (31), மகன் திலக் கலாம் (4) நேசவள்ளியின் தாய் தமிழரசி (52) ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த ஜூலை 5 ஆம் தேதி நீண்ட நேரமாகியும் நேசவள்ளி கதவைத் திறக்காததால், சந்தேகமடைந்த வீட்டின் உரிமையாளர் சுப்பிரமணியன் சென்று பார்த்தபோது, வீடு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது.

சந்தேகமடைந்த அவர் மூலனூர் போலீஸாருக்கும், கிராம நிர்வாக அலுவலரான உதயகுமாருக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.



இதையடுத்து, அங்கு வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, நேசவள்ளியின் மகன் திலக்கலாம்(4) வீட்டுத் திண்ணையிலும், நேசவள்ளி முன்பக்க அறையில் தூக்கிட்ட நிலையிலும் இறந்து கிடந்துள்ளனர்.

மேலும், அவரது தாய் தமிழரசி உயிருக்குப் போராடிய நிலையில் கிடந்தார்.



இதையடுத்து, அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுதொடர்பாக தமிழரசியிடம் விசாரித்ததில், பழனி ராம் நகர் சொந்த ஊர். 5 ஆண்டுகளுக்கு முன் மகள் நேசவள்ளியை செங்காளி வலசைச் சேர்ந்த ஜோதிபாசுவுக்கு திருமணம் செய்து கொடுத்தோம்.

இந்நிலையில், தனது மருமகன் ஜோதிபாசு குடித்துவிட்டு நாள்தோறும் தனது மகளுடன் சண்டையிட்டு வந்தததால், கடந்த 3 மாதங்களுக்கு முன் கன்னிவாடி மேற்குத் தெருவில் சுப்பிரமணியன் வீட்டுக்கு பேரனுடன் நானும், மகளும் குடிவந்தோம்.

கடந்த சில நாள்களுக்கு முன் வீட்டின் உரிமையாளர் சுப்பிரமணியனுக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் வீட்டைக் காலி செய்யுமாறு அவர் வற்புறுத்தி வந்தார்.

இதனால், எங்கு செல்வது என்ற மன உளைச்சலில் இருந்த மகளும், நானும் தற்கொலை செய்து கொள்ளலாம் என முடிவு செய்து செவ்வாய் கிழமை இரவு பேரன் திலக் கலாமுக்கு எலி மருந்து மற்றும் தூக்க மாத்திரை கொடுத்தோம்.

பின்னர் நானும், மகள் நேசவள்ளியும் எலி மருந்தை சாப்பிட்டதால் நான் மயக்க நிலைக்குச் சென்றுவிட்டேன். காலையில் தான் மகள் நேசவள்ளி முன்புற அறைக்குச் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதும், பேரன் திலக்கலாம் உயிரிழந்ததும் தெரியவந்தது என்று கூறியுள்ளார்.



இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த மூலனூர் போலீசார் நேசவள்ளியின் கணவர் ஜோதிபாசு, வீட்டின் உரிமையாளர் சுப்பிரமணியனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...