கோவை சூலூர் அருகே டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பாஜக ஆர்ப்பாட்டம்!

சூலூர் அடுத்த செஞ்சேரிமலை பகுதியில் மந்திரகிரி வேலாயுதசாமி கோவில் மற்றும் அரசு மேல்நிலை பள்ளிக்கு அருகில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் காமாட்சிபுரி ஆதீனம் உட்பட 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி பாஜக சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சூலூர் அருகே செஞ்சேரி மலையில் மந்திரகிரி வேலாயுதசாமி கோவில் மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு அருகில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த மதுக்கடையை அகற்றக் கோரி அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கடந்த 4 ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஆனாலும் இந்த டாஸ்மாக் கடையை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கோவை வடக்கு மாவட்ட பாரதீய ஜனதா சார்பில் செஞ்சேரி மலையில் டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

வடக்கு மாவட்ட முன்னாள் தலைவர் மோகன் மந்திராசலம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் காமாட்சிபுரி ஆதீனம் சாந்த ஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள் முன்னிலை வகித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் மணிகண்டன், சுல்தான்பேட்டை ஒன்றிய பொதுச்செயலாளர் ரவி உள்பட 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது அடை மழை பெய்த போதிலும் ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்தவர்கள் அங்கிருந்து நகராமல் மதுக்கடைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் செஞ்சேரிமலையில் உள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும், மதுவை ஒழிப்போம், நாட்டை காப்போம், ஆகஸ்டு மாதம் 1-ந்தேதிக்குள் டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற வேண்டும். இல்லை என்றால் கடைக்குள் புகுந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

காமாட்சிபுரி ஆதீனம் சாந்த ஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள் ஆர்ப்பாட்டத்தில் பேசியதாவது, இந்தியா மதுவில்லாத நாடாக மாற நாம் போராட வேண்டும். செஞ்சேரி மலையில் உள்ள மதுக்கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என்று இப்பகுதியில் அனைவரும் கட்சி பேதமின்றி கோரிக்கை வைக்கின்றனர். இதனை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றி தரவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...