திருப்பூரில் காவல்துறை வாகனம் மோதி சிறுமி உயிரிழந்த விவகாரம் - சிறுமியின் உடலை பெற்றுக்கொள்ள சொல்லி மிரட்டுவதாக குற்றச்சாட்டு!

திருப்பூர் அருகே காவல்துறை வாகனம் மோதிய விபத்தில் சிறுமி உயிரிழந்த நிலையில், தாய் படுகாயம் அடைந்துள்ளதால் தந்தை வரும் வரை காத்திருக்கும் சூழலில் சிறுமியின் உடலை பெற்றுக்கொள்ள சொல்லி காவல்துறையினர் மிரட்டுவதாக அவர்களது உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.



திருப்பூர்: திருப்பூரில் காவல்துறையினரின் வாகனம் போது சிறுமி உயிரிழந்த சம்பவத்தில் காவல்துறையினர் சிறுமியின் உடலை பெற்றுக்கொள்ள மிரட்டி வருவதாக உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.



திருப்பூர் காங்கேயம் சாலையில் நேற்று போலீஸ் வாகனத்தை இயக்கி இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் சிறுமி திவ்யதர்ஷினி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக முதற்கட்டமாக வீரசின்னன் மீது 304 A பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அஜாக்கிரதையாக வாகனம் இயக்கி விபத்து மற்றும் மரணம் விளைவித்தல் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தாக்கியதில் காயமடைந்த வீரசின்னன் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் விசாரணையின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.



இந்நிலையில் விபத்து குறித்த சிசிடிவி காட்சி வெளியிடப்பட்டுள்ளது. இதில் திவ்யதர்ஷினி மற்றும் அவரது தாய் ராஜேஸ்வரி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது திவ்யதர்சனியின் பள்ளி பை கீழே விழுந்த போது நிலை தடுமாறிய ராஜேஸ்வரி இருசக்கர வாகனத்தோடு கீழே விழுந்துள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக பின்னால் வேகமாக வந்த காவல்துறையினரின் வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. இந்த நிலையில் சிறுமி திவ்யதர்சனியின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பிரேத பரிசோதனை நிறைவடைந்து உடலை பெற்றுக்கொள்ள காவல்துறையினர் தங்களை தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் ஆனால் குழந்தையின் தாய் ராஜேஸ்வரி படுகாயங்களுடன் கோவை தனியார் மருத்துவமனையிலும் தந்தை குவைத்தில் இருக்கக்கூடிய நிலையில் தாங்கள் எப்படி உடலை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் கூறுகின்றனர்.

அதனால் தந்தை வரும் வரை உடலைப் பெற்றுக் கொள்ள மாட்டோம் என தெரிவிப்பதால் காவல்துறையினர் தங்களை உடலை பெற்றுக்கொள்ள தொடர்ந்து மிரட்டி வருவதாகவும் இதுவரை காவலர் வீர சின்னன் மது போதையில் இருந்ததாக தெரிவித்த குற்றச்சாட்டு காவல்துறை விளக்கம் அளிக்கவில்லை.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து உடலை வாங்க மறுத்து வருகின்றனர். இந்நிலையில் தந்தை வெளிநாட்டில் இருந்து இந்தியா திரும்பி வர தூதரகத்தின் மூலம் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் இன்று இரவு அவர் குவைத்தில் இருந்து இந்தியா புறப்படுவார் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...