பல்லடம் அடுத்த கரைப்புதூரில் வரதட்சனை கேட்டு காதல் மனைவிக்கு அடி உதை!

பல்லடம் அருகே கரைப்புதூர் பகுதியில் வரதட்சனை கேட்டு காதல் மனைவியை கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரத்த காயத்துடன் இளம் பெண் கை உடைந்த நிலையில் பல்லடம் அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


திருப்பூர்: பல்லடம் அருகே கரைப்புதூர் பகுதியில் வரதட்சணை கேட்டு மனைவியை தாக்கி கையை உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பல்லடம் அருகே ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி தொட்டி அப்பிச்சி கோவில் அருகில் உள்ள ராஜலட்சுமி நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் என்பவரது மகள் ரூபினி (24). இவரும் கரைப்புதூர் அண்ணா நகரை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜா (24) இருவரும் கல்லூரி படிக்கும் போது இருந்து ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இருவரும்வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு பெற்றோர் சம்மதிக்கவில்லை.



இந்த நிலையில் ரூபினியின் அக்கா கணவர், பழனிவேல் ராஜா மற்றும் ரூபினி இருவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செய்து வைத்துள்ளார்.

சென்னை போரூரில் தனியார் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சியாளராக ராஜா வேலைக்கு சேர்ந்ததால் ரூபினியை சென்னைக்கு அழைத்து சென்று வாடகைக்கு வீடு எடுத்து தங்க வைத்து வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்த நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதோடு கடந்த ஒரு மாதமாக வரதட்சனை கேட்டு ரூபினியை ராஜா அடித்து துன்புறுத்தி ரூபினின் கையை உடைத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு சென்னையில் இருந்து பல்லடம் கரைப்புதூர் அழைத்து வந்து தனது தந்தை ராஜேந்திரனின் வீட்டில் வைத்து மீண்டும் ரூபினியை ராஜா மற்றும் அவரது குடும்பத்தினர் சரமாரியாக தாக்கியதில் ரூபிணி ரத்தம் சொட்ட சொட்ட வீட்டிற்கு வெளியே தப்பித்து வந்து அக்கம் பக்கத்தினரின் உதவியோடு போலீசாரின் அவசர தொலைபேசி எண்ணிற்கு அழைத்து தகவல் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து ஆம்புலன்ஸ் வாகனத்தில் வந்து பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார்.



இதுகுறித்து ரூபினி பல்லடம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வரதட்சணை கேட்டு அடித்து துன்புறுத்தி கையை முறித்த ராஜா மற்றும் அவர்களது குடும்பத்தார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரூபினியின் உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைத...

போதைப்பொருள் கடத்தல், பார்சல் மோசடிகளை தடுக்க கூரியர் நிறுவனங்களுக்கு கோவை காவல் துறை முக்கிய அறிவுறுத்தல்..!

கூரியர், பார்சல் மற்றும் டிராவல்ஸ் பார்சல் நிறுவனங்களின் மேலாளர்களுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், CCTV, KYC,...

கோவை அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடுகளை உடனே சரிசெய்ய வேண்டும் - சிபிஐ(எம்) மனு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கழிவறை பராமரிப்பு மற்றும் பற்றாக்குறை காரணமாக எழும் சுகாதார குறைபாடுகளை போ...

பீளமேடு வார்டு 27-ல் மரக்கிளை வெட்டு பணியும் தூய்மை ஆய்வும் - கவுன்சிலர் அம்பிகா தனபால்

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டு...

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...