உடுமலை அருகே பாம்பு கடித்து மலை கிராமப் பெண் காயம்!

உடுமலை அடுத்துள்ள குழிப்பட்டி என்ற மலை கிராமத்தில் பெண் ஒருவரை பாம்பு கடித்த நிலையில் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பாதை இல்லாததால் இயற்கையான முறையில் பசுமருந்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவமனைக்கு செல்ல பாதை அமைத்து தர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: உடுமலை அருகே குழிப்பட்டி மலை கிராமத்தில் பெண்ணை பாம்பு கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை வனச்சரகம் குழிப்பட்டி மலைவாழ் கிராமத்தில் மாரியம்மாள் என்ற பெண்ணை கட்டுவீரியன் பாம்பு நேற்று இரவு கடித்து விட்டது. இந்த நிலையில் பாம்பு கடித்த பெண்ணை உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வர பாதை இல்லை.



இதன் காரணமாக இயற்கையான முறையில் பசுமருந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இந்தப் பகுதியில் ஒரு சில நேரங்களில் காட்டு யானைகள் அட்டகாசமும் அதிகரித்துள்ளது. இதற்கிடையில் குழிபட்டியில் இருந்து உடுமலைக்கு வர தற்பொழுது காடம்பாறை ஆழியாறு ஆனைமலை வழியாக வந்தால் சுமார் 3 மணி நேரம் ஆகிறது.

ஆனால் குழிப்பட்டியில் திருமூர்த்தி மலைக்கு வனப்பகுதியில் பாதை அமைத்து கொடுத்தால் ஏராளமான மலைவாழ் மக்கள் உயிர்கள் காப்பாற்றப்படும்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழிப்பட்டி மாவடைப்பு உள்ளிட்ட மலை கிராமமக்கள் உடுமலைக்கு எளிதாக வர சாலை வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...