கோவை பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கம் சார்பில் மகளிருக்கான பிசியோதெரபி மருத்துவ கருத்தரங்கு அவினாசிலிங்கம் மகளிர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

இதில், கோவை பிசியோதெரபி மருத்துவர்கள் சங்க தலைவர் டாக்டர். ராஜா செல்வகுமார், செயலாளர் டாக்டர். ராஜேஸ்கண்ணா மற்றும் மகளிர் மருத்துவர்கள் பிரிவு பொருப்பாளர் டாக்டர். சம்பூர்ணா, டாக்டர்கள் கணபதி முருகன், சீதா, வினோதினி, ப்ரியா, சுகன்யா தேவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த மருத்துவ கருத்தரங்கில் பேசிய மகப்பேறு பிசியோதெரபி மருத்துவர் டாக்டர். சம்பூர்ணா பேசும் போது மகளிருக்கான உணவு முறைகள் குறித்தும் அவர்களின் ஆரோக்கியத்திற்கான உடற்பயிற்சிகள் குறித்தும் மகளிருக்கான உடல் ரீதியான பிரச்சனைக்கான தீர்வுகள் குறித்தும் விரிவாக உரையாற்றினார். இறுதியில் மாணவியர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார்.

இதனைத்தொடர்ந்து, பெண்களுக்கு ஏற்படும் மூட்டு வலி, முதுகு வலி உள்ளிட்ட பிரச்சனைகள் தொடர்பான இலவச சிறப்பு பிசியோதெரபி மருத்துவ முகாம் நடைபெற்றது. மேலும், பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகள் குறித்த சிகிச்சைக்கு தகுந்த மருத்துவர்களை அனுக ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.