கோவை மாவட்ட சமூக நீதிக்கட்சியின் மகளிர் அணி சார்பில் இன்று சர்வதேச மகளிர் தினம் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கொண்டாடப்பட்டது.

அக்கட்சியின் மாநில மகளிர் அணி செயலாளர் சி.கிரிஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் திரளான பெண்கள் கலந்துகொண்டு கேக் வெட்டி மகளிர் தினத்தை கொண்டாடினர்.

இதனைத்தொடர்ந்து, கல்வி, வேலை வாய்ப்புகளில் 50 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். பெண்களுக்கு தற்காப்புகளுக்கான ஆயுதங்கள் வழங்க வேண்டும். ஆணவக் கொலைகளை தடுக்க தனி சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பறை முழக்க ஆர்ப்பாட்டம் நடத்தினர்.