மணிப்பூர் கலவரத்தை கண்டித்து திருப்பூரில் காந்தி சிலைக்கு மனு கொடுக்கும் போராட்டம்!

மணிப்பூர் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பாக அனைத்திந்திய தேசிய மாதர் சம்மேளனத்தினர் பாஜக அரசு பதவி விலக வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தீப்பந்தம் ஏந்தி காந்தி சிலைக்கு மனு கொடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து திருப்பூரில் மாதர் சம்மேளனத்தினர் காந்தி சிலைக்கு மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.



மணிப்பூர் மாநிலத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வரக்கூடிய நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக பழங்குடியின பெண் இருவர் நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்யப்பட்டு ஊர்வலமாக அழைத்து வரப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.

இந்த வீடியோ நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் இதற்கு பல்வேறு தரப்பினரும் நாடு முழுவதும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மணிப்பூர் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.



இச்சம்பவத்திற்கு காரணமாக மணிப்பூரில் ஆளும் பாஜக அரசு பதவி விலக வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பாக உள்ள காந்தி சிலை முன் அனைத்திந்திய மாதர் சம்மேளனத்தினர் தீப்பந்தம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இதனை தொடர்ந்து அமைதியை நிலை நாட்ட வலியுறுத்தி காந்தி சிலையிடம் மனு அளித்தும் தங்களது எதிர்ப்பை தெரியப்படுத்தினர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...