வால்பாறையில் இருந்து பழைய இரும்பு உள்ளிட்ட பொருட்களை ஏற்றிக்கொண்டு ஈச்சர் வாகனம் ஒன்று பொள்ளாச்சி நோக்கி வந்துகொண்டிருந்தது.
வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் மலைப் பாதையில் 24 மற்றும் 25-வது கொண்டை ஊசி வளைவில் வால்பாறையிலிருந்து அதிகம் பாரம் ஏற்றி வந்த அந்த ஈச்சர் லாரி எதிர்பாராத விதமாக வளைவில் உருண்டு விபத்திற்குள்ளானது.வால்பாறையிலிருந்து அதிகம் பாரம் ஏற்றி வந்த அந்த ஈச்சர் லாரி எதிர்பாராத விதமாக வலைவில் உருண்டு விபத்திற்குள்ளானது.

இதில், பழைய இரும்பு வியாபாரி சுப்பிரமணியன் (55) சம்பவ இடத்திலே உயிரிழந்தார். மேலும், ஓட்டுநர் மற்றும் கிளீனர் படுகாயங்களுடன் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தின் காரணமாக வால்பாறை முதல் ஆழியாறு இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.