பேனர் வைக்கும் போது உயிரிழந்த ரசிகர்கள் - ஆறுதல் கூறிய நடிகர் சூர்யா!

நடிகர் சூர்யாவின் பிறந்த நாளையொட்டி ஆந்திர மாநிலத்தில் பேனர் கட்டும் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த இரண்டு இளைஞர்களின் குடும்பத்திற்கு வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு சூர்யா ஆறுதல் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவர்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்து தருவதாகவும் உறுதியளித்துள்ளதாக கூறப்படுகிறது.


சென்னை: ஆந்திர மாநிலத்தில் பேனர் கட்டும் போது உயிரிழந்த ரசிகர்களின் குடும்பத்திற்கு நடிகர் சூர்யா வீடியோ கால் மூலம் ஆறுதல் கூறியுள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் ஒவ்வொருவரின் பிறந்தநாளன்றும் ரசிகர்கள் அவர்களின் நற்பணி மன்றம் சார்பாக பலவிதமான உதவிகளை மக்களுக்கு செய்து வருகின்றனர். ரசிகர் மன்றத்தினர் ரத்ததானம், அன்னதானம், மாணவர்களின் கல்விக்கு உதவுவது போன்ற பல செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல், அந்த நடிகர்களுக்கு போஸ்டர்களும், பேனர்களும் வைத்து கொண்டாடுகின்றனர்.

நடிகர் சூர்யா நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வகையில் ஆந்திர மாநிலத்தில் இரண்டு ரசிகர்கள் சூர்யாவின் பேனர் கட்டும்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். இந்த சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில், இறந்த ரசிகர்களின் குடும்பத்திற்கு வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு சூர்யா ஆறுதல் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவர்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்து தருவதாகவும் உறுதியளித்துள்ளதாக கூறப்படுகிறது.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...