கோவை சுந்தரலிங்கேஸ்வரர் கோவிலில் புதிய சிலைகளை தண்ணீரில் வைக்கும் நிகழ்வு!

கோவை கதிர்நாயக்கன் பாளையம் லஷ்மி நகர் பேஸ் 3ல் அமைக்கப்பட்டு வரும் சுந்தரலிங்கேஸ்வரர் திருக்கோவிலில் நிறுவப்படும் திருமேனிசிலைகள் திருப்பூர் மாவட்டம் திருமுருகன் பூண்டியில் இருந்து சிவனடியார்கள் மற்றும் இறை அன்பர்களின் முன்னிலையில் பூஜைகள் செய்யப்பட்டு வாகனங்களில் எடுத்து வரப்பட்டு சிலைகள் நீரில் வைக்கப்படும் நிகழ்வு நடைபெற்றது.



கோவை: கோவை கதிர்நாயக்கன் பாளையம் பகுதியில் உள்ள சுந்தரலிங்கேஸ்வரர் கோவிலில் புதிய சாமி சிலைகளை தண்ணீரில் வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.



கோவை குருடிமலை அடிவாரம் குருடம்பாளையம் கிராமம் கதிர் நாயக்கன்பாளையம் ஆர் எல் ஜி குடியிருப்பு பகுதி லஷ்மி நகர் பேஸ் 3ல் அமைக்கப்பட்டு வரும் அருள்தரும் சுந்தரவல்லி உடனமர் சுந்தரலிங்கேஸ்வரர் திருக்கோவில் வருகின்ற செப்டம்பர் 17ம் தேதி கும்பாபிஷேகம் விழா நடைபெற உள்ள நிலையில் திருக்கோவிலில் நிறுவப்படும் திருமேனிசிலைகள் திருப்பூர் மாவட்டம் திருமுருகன் பூண்டியில் இருந்து சிவனடியார்கள் மற்றும் இறை அன்பர்களின் முன்னிலையில் பூஜைகள் செய்யப்பட்டு வாகனங்களில் எடுத்து வரப்பட்டது.



இதன் தொடர்ச்சியாக வடமதுரை அருள்மிகு விருந்தீஸ்வரர் திருக்கோவிலில் பூஜைகள் செய்து மேளதாளங்களுடன் மேட்டுப்பாளையம் சாலை தொப்பம்பட்டி, பிரிவு, சர்வோதய காலனி, ஜங்கம் நாயக்கன்பாளையம், தொப்பம்பட்டி வழியாக கதிர் நாயக்கன்பாளையம் விநாயகர் கோவிலுக்கு சென்று பூஜைகள் செய்யப்பட்டது.

மேலும், ஊர் பக்தர்கள் திருமேனி சிலைகளுக்கு மஞ்சள் நீர் ஊற்றி வழிபட்டு விஜயா நகர், பிரைட் ஹோம், வாட்டர் போர்டு காலனி, குரு சக்தி கார்டன், ஏடி காலனி, ரேணுகாபுரம் வழியாக கிரீன் பீல்டில் உள்ள ஞான விநாயகர் கோவிலுக்கு சென்று அங்கும் பூஜைகள் செய்யப்பட்டு திருமேனி சிலைகளுக்கு மஞ்சள் நீர் ஊற்றி பக்தர்களின் படை சூழ ஆர் எல் ஜி குடியிருப்பு பகுதி லட்சுமி நகர் பேஸ் 3ல் உள்ள அருள்தரும் சுந்தரவல்லி உடனுறை சுந்தரலிங்கேஸ்வரர் திருக்கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு 48 நாட்கள் இறைவனின் திருமேனி சிலைகள் நீரில் வைக்கப்படும் நிகழ்வு நடைபெற்றது.

இதன் தொடர்ச்சியாக இறை அன்பர்கள் வணங்கி தலவிருட்சம் வில்வம், வன்னி மரம் வைக்கப்பட்டது. பின்பு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.



இதில் ஏராளமான இறையன்பர்களும் சிவனடியார்களும் கலந்து கொண்டு இவ்விழாவினை சிறப்பித்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...