கோவை புத்தக திருவிழாவில் ‘என்றும் இனிக்கும் சங்க இலக்கியம்’ என்ற தலைப்பில் எழுத்தாளர் ஜெயமோகன் உரை!

கோவை கொடிசியா வளாகத்தில் 7வது புத்தக திருவிழா நடைபெற்று வரும் நிலையில், 4ஆம் நாளில் நடைபெற்ற அறிவுக்கேணி நிகழ்ச்சியில் பங்கேற்ற எழுத்தாளர் ஜெயமோகன், ‘என்றும் இனிக்கும் சங்க இலக்கியம்’ என்ற தலைப்பில், குகை ஓவியங்கள் மற்றும் கற்கால மனிதனின் வாழ்க்கை முறை தொடர்பாக உரையாற்றினார்.


கோவை: கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக திருவிழாவில், எழுத்தாளர் ஜெயமோகன் ‘என்றும் இனிக்கும் சங்க இலக்கியம்’ என்ற தலைப்பில் உரையாற்றினார்.

கோவை மாவட்ட நிர்வாகம், கொடிசியா மற்றும் தென்னிந்திய புத்தகப் பதிப்பாளர்கள் சங்கம் ஆகிய இணைந்து நடத்தும், “7-வது புத்தகத் திருவிழா – 2023”, கோவை - அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா வர்த்தக வளாகத்தில் நடைபெற்று வருகிறது.

நான்காம் நாளான இன்று (24.07.2023) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அறிவுக்கேணி நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் 8, 9, 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலப் பேச்சுப்போட்டி நடைபெற்றது.

இதனையடுத்து, மாலை 6.30 மணிக்கு நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில், எழுத்தாளர் ஜெயமோகன், “என்றும் இனிக்கும் சங்க இலக்கியம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது,



பெருங்கற்காலத்திற்கும், நவீன காலத்தில் மிகப்பெரிய இடைவெளி உள்ளது. இந்தியாவில் உள்ள குகை ஓவியங்கள் சுமார் பதினைந்து ஆயிரம் ஆண்டுகள் முதல் இருபதாயிரம் ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை.

இவை தொல்மனிதன் வரைந்தவை. பீம்பேட்கா குகை ஓவியங்கள் இந்தியாவில் உள்ளது. உலகம் முழுவதும் கலாச்சாரத்தைத் தேடிச் செல்வதற்கான தொடக்கம் அது. அவ்வோவியங்களில் முக்கியமானவை.

வேட்டை விலங்குகள். மான்கள், காளைகள் அதில் காணப்படுகின்றன. மனிதனைத் தீக்குச்சி போல் வரைந்திருப்பார்கள். பல விலங்குகள் தோலுறிக்கப்பட்ட நிலையில், எலும்புகள் தெரியும் நிலையில், மேய்ந்துக் கொண்டிருக்கின்றன.



உண்மையில் அப்படி இருக்குமா? என்றால் இல்லை. அது கனவு. அவர்கள் கொன்றுத் தின்ற விலங்குகள் அவனது கனவில் அப்படித் தோன்றியிருக்கலாம். தொன்மங்கள் அப்படி பொருள்படலாம். மனித பரிமாணம் என்பது ஒன்று எதார்த்தம், மற்றொன்று கனவு. இதைத்தான் இலக்கியங்கள் உணர்த்துகின்றன. கனவுகளைத் தொடுத்துத், தொடுத்து உருவாக்கியுள்ளதை நான் குகை ஓவியங்களில் தான் பார்த்தேன்.

இந்தியாவில் கற்கால மக்கள், அதிநவீன மக்கள் இந்தியாவில் தான் உள்ளன. கற்கால ஓவியங்களை தற்போதுள்ள பழங்குடிகள் மூலமாகவே அறிந்துக் கொள்ள முடியும். பூசாரிகள் மிகவும் முக்கியமானவர்கள். அவர்களுக்கு மழைக்காலம் தெரியும். பயிர் விளையும் காலம் தெரியும். ஓவியங்கள் தீட்டுவார்கள்.



எல்லாம் கலந்தவன் பூசாரி. கேரள ஓவியங்களில் இவை தென்படுகின்றன. பூசாரிகள் தெய்வமாகப் பார்க்கப்படுவார்கள். இந்த பூசாரி சங்க இலக்கியத்தில் எங்கு இருக்கிறான் என்றால், நடராஜர் சிலை வடிவில் இருக்கிறான். சங்க இலக்கியத்தில் வேலன் வெறியாடும் நிகழ்வு உள்ளது.

முருகு என்ற தெய்வத்தின் பூசாரி. தலைவிக்கு காதல் நோய் வந்தால் அதைத் தீர்க்க வேலன் வெறியாட்டம் ஆடுவான். இந்த நிகழ்வு கேரள மாநிலத்தில் உள்ள காசர்கோடு பகுதியில் உள்ள கோயில் திருவிழாக்களில் இன்றும் நடைபெறுகிறது. சங்க இலக்கியம் இன்று ஆய்வு நோக்கத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் கொடிசியா தலைவர் வி. திருஞானம், கோவை புத்தகக் கண்காட்சித் தலைவர் கே.ரமேஷ் மற்றும் எழுத்தாளர்கள், கவிஞர்கள், வாசகர்கள், பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...