திராவிடர் கழகத்தின் முன்னாள் தலைவர் மணியம்மை பிறந்த நாளை முன்னிட்டு, பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் உள்ள மனு தர்ம நூலை கொளுத்தும் போராட்டம் நடத்த உள்ளதாக திராவிடர் கழகத்தினர் அறிவித்து இருந்தனர்.

இதன்படி அவ்வமைப்பினர் இன்று மாநிலம் தழுவிய மனு தர்ம நகல் எரிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக திராவிடர் கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பெண்களை இழிவுப்படுத்தும் வகையிலும், சமூக நீதி தத்துவத்திற்கு எதிராகவும், சாதி பிரிவினைகளை ஊக்குவிக்கும் வகையில் மனு தர்மம் உள்ளதாகவும் கண்டன முழக்கங்களை எழுப்பியபடி மனு தர்ம நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத்தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.