உடுமலையில் பிரதமர் மோடி சிலையை தத்ரூபமாக வடிவமைத்த மண்பாண்ட கலைஞருக்கு குவியும் பாராட்டு!

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தொடங்கியுள்ள பாத யாத்திரையை நினைவுகூறும் விதமாக 'என் மண் என் மக்கள்'என்ற வாசகத்துடன் பிரதமர் மோடியின் உருவ பொம்மையை களிமண்ணால் உருவாக்கியுள்ள உடுமலையை சேர்ந்த மண்பாண்ட கலைஞரான ரஜினி ரஞ்சித்துக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.



திருப்பூர்: பிரதமர் மோடியின் களிமண் சிலையை உருவாக்கிய உடுமலையை சேர்ந்த மண்பாண்ட கலைஞர் ரஜினி ரஞ்சித்துக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த பூளவாடி பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித். மண்பாண்டக் கலைஞரான இவர் தீவிர ரஜினி ரசிகராவார். இதனால் ரஜினி ரஞ்சித் என்று தன் பெயரை மாற்றிக் கொண்டுள்ளார்.

இவர் ஒவ்வொரு ரஜினி படம் தயாராகும் போதும் அந்த படத்தில் ரஜினியின் தோற்றத்தை களிமண் சிலையாக செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த நிலையில் தற்போது தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தொடங்கியுள்ள பாத யாத்திரையை நினைவுகூறும் விதமாக 'என் மண் என் மக்கள்'என்ற வாசகத்துடன் இந்திய பிரதமர் மோடியின் உருவ பொம்மையை களிமண்ணால் உருவாக்கியுள்ளார்.

இதில் மோடி கையில் செங்கோல் ஏந்திய வண்ணம் காட்சியளிக்கிறார். வெறும் மண்பாண்டங்களை மட்டுமல்லாமல் அவ்வப்போது பிரபலமாகும் விஷயங்களை உருவமாக செய்யும் இந்த மண் பாண்டக்கலைஞருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றன்ர்.

Newsletter

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...