தமிழர்களின் பாரம்பரியக் கலைகளில் ஒன்றாது பறை கலையாட்டம். அழிவின் விழிம்பில் உள்ள இக்கலையாட்டத்தை மீட்டெடுக்க வேண்டி பல்வேறு தமிழ் அமைப்பினர், நாடகக் கலைஞர்கள் பயிற்சிகள் வழங்கி வருகின்றனர். மேலும், அதனை தமிழ் கல்லூரிகளில் பாடத்திட்டமாக்க வேண்டும் என்னும் தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அத்தகைய கோரிக்கைகளின் வெற்றியாக தற்போது பறையாட்டக் கலை பாடத்திட்டமாக்கப்பட்டுள்ளது.
பாரதியார் பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பேரூர் தமிழ்க்கல்லூரியில் வளர்சீர் கயிலை சமுதாயக் கல்லூரியின் வழியே பறையாட்டக்கலை பட்டய படிப்பிற்கான வடிவம் தற்போது பெறப்பட்டுள்ளது.
தமிழுக்க என தனியொரு கல்லூரியில் பறைக்கென ஒரு பாடத்திட்டம் உருவாகியிருப்பது அனைத்து பறை கலைஞர்கள் மத்தியிலும் மகிழ்ச்சி மற்றும் தன்னம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
முதல் பறை பயிற்சி பட்டறைக்கும், பறை இசைப்பள்ளிக்குமான இடமளித்து ஊக்கமளித்து தமிழும், கலையும் நிறைந்திருக்கும் திருப்பூர் தாய்த்தமிழ்ப் பள்ளியின் தாளாளர் கு.ந.தங்கராசு மற்றும் ஆசிரியர்கள் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
மேலும், இப்பறையாட்டக் கலை பட்டய சான்றிதழ் பாரதியார் பல்கலைக் கழகத்தின் மூலம் வழங்கப்படும். இதில் சேர 10-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்று சான்றிதழ் நகல் மற்றும் இரண்டு புகைப்படம் ஆகியவற்றுடன் பாரதியார் பல்கலைக் கழகத்தினை அனுக வேண்டும். இதுகுறித்தான மேலும் தகவலுக்கு 9659277222, 9944952893 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்புகொள்ளலாம்.