கோவை ஆட்சியர் அலுவலகத்தில் வட மாநிலத்தை சேர்ந்த நபர் கல் வீச்சு தாக்குதல் - பரபரப்பு!

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கருவூல அலுவலகத்தின் மேற்கூரை மீது ஏறிய வடமாநிலத்தை சேர்ந்த மனநலம் குன்றிய நபர், அங்கிருந்த ஓடுகள், கற்கள், குழாய்களை கீழே நடந்து சென்றவர்கள் மீது வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: கோவை ஆட்சியர் அலுவலக மேற்கூரை மீது ஏறிய வடமாநில நபர் ஒருவர், அங்கிருந்த ஓடுகள், கற்கள், குழாய்களை கொண்டு தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் பின்புறம் செயல்பட்டு வரும் கருவூல அலுவலகம் மேற்கூரையில் இருந்து வட மாநில நபர் ஒருவர் சட்டையின்றி, மாடியில் கிடந்த ஓடுகள், கற்கள், குழாய்களை கொண்டு, கீழே நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் நின்று கொண்டு இருந்தவர்கள் மீது எரிந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.



பின்னர் விரைந்து வந்த காவல்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினர் கருவூல அலுவலகம் மேலே ஏறி அவரை மடக்கிப் பிடித்தனர்.



பின்னர் அவரது கை கால்களை கயிற்றால் கட்டி கீழே இறக்கினர்.



அந்த வட மாநில நபர் அசாம் பகுதியை சேர்ந்த விகாஷ் எனவும் மனவளர்ச்சி குன்றியவர் எனக் கூறப்படும் நிலையில் எவ்வாறு அவர் மேலே ஏறினார் என்று விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



அவர் மாடியில் இருந்து கற்களை வீசியதில் பொதுமக்கள் ஒருவருக்கு சிறு காயம் ஏற்பட்டுள்ளது. அதே சமயம் அவரது உடலிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளதால் அவரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...