கோவை மாநகராட்சி சார்பில் பாதாள சாக்கடைத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டதாகவும், பாதாள சாக்கடை திட்டத்தால் பல விபத்துக்கள் நேர்ந்து மரணக்குழியாக காட்சியளிப்பதாகவும் கூறி வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா கட்சியின் மகளிர் அணியினர் கோவை மா நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.

முன்னதாக கோஷங்கள் எழுப்பி மாநகராட்சி அலுவலத்தை நோக்கி வந்த அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். மேலும், 22 பேரை கைது செய்தனர்.

முன்னதாக கோஷங்கள் எழுப்பி மாநகராட்சி அலுவலத்தை நோக்கி வந்த அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். மேலும், 22 பேரை கைது செய்தனர்.