ஈஷா யோக மையத்தின் ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்ற கோரி கோவையில் ஆர்ப்பாட்டம்

ஈஷா யோக மையத்தின் ஆக்கிரமிப்பு பகுதிகளை  அகற்ற கோரியும், மலைவாழ் மக்களுக்காக போராட்டியவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை கண்டித்தும் தமிழக தீண்டாமை ஒழிப்பு முன்னணி, ஆதித்தமிழர் கட்சி மற்றும் சமூக நீதிக்கட்சியினர் கோவை தெற்கு தாலுக்கா அலுவலலம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற்ற தமிழக தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணை பொது செயலாளர் சிவஞானம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-



சட்டத்திற்கு புறம்பாக ஈஷா கட்டிடங்களை கட்டியதை உயர் நீதிமன்றமே உறுதி செய்து விட்ட நிலையில் இன்னும் அந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. உடனடியாக ஈஷா ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். 

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஈஷா ஆக்கிரமித்த மலைவாழ் மக்களுக்கு சொந்தமான 44 ஏக்கர் உபரி நிலத்தை மீட்க எங்கள் கட்சியை சேர்ந்த தலைவர்கள் போராட்டங்கள் நடத்தினர். தற்போது அவர்கள் மீது பொய் வழக்குகள் புனையப்பட்டுள்ளது.இந்த செயலை கண்டித்து இன்று மாவட்டங்கள் முழுவதும் எங்கள் கட்சிகளின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

இன்று கல்லூரி மாணவர் ஒருவர் ஈஷா வளாகத்தில் உள்ள சூர்ய குண்டத்தில் குளித்ததால் மரணமடைந்துள்ளார். இது குறித்து உரிய நீதி விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஈஷா மற்றும் காருண்யா நிறுவனங்களுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...