துடியலூர் கருப்பராயர் கோவிலில் ஆடிப்பெருக்கு திருவிழா - ஏராளமான பக்தர்கள் தரிசனம்!

துடியலூரை அடுத்த வடமதுரை வி.எஸ்.கே.நகர் பகுதியில் உள்ள அருள்மிகு கருப்பராயர் திருக்கோவிலில் ஆடி 18ம் நாளை ஒட்டி ஆடிப்பெருக்கு திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கருப்பராயன் சுவாமியை தரிசனம் செய்தனர்.



கோவை: துடியலூரை அடுத்த வடமதுரை கருப்பராயர் திருக்கோவிலில் ஆடிப்பெருக்கு திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

கோவை துடியலூரை அடுத்த வடமதுரை வி.எஸ்.கே.நகர் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு கருப்பராயர் திருக்கோவில். இக்கோவிலில் எழுந்தருளியுள்ள அருள்மிகு கருப்பராயன் சுவாமி வி எஸ் கே நகர் மற்றும் சார்பு நகரங்களின் காவல் தெய்வமாக விளங்குகிறது.

இக்கோவிலில் ஆடி 18ம் நாளை ஒட்டி ஆடிப்பெருக்கு திருவிழா ஓவ்வொரு ஆண்டும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் கருப்பராயன் சுவாமிக்கு பால், தயிர், நெய், திருநீர், சந்தம், இளநீர் உள்ளிட்ட அபிசேகங்கள் செய்யப்பட்டு, அலங்கார பூஜைகள் மற்றும் தீபாரதனை நடைபெற்றது.



இதில் சுற்று வட்டாரங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கருப்பராயன் அருளைப் பெற்றனர்.



தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு கேசரி, சுண்டல், பொங்கல், சாம்பார் சாதம் உள்ளிட்ட மகா அன்னதானம் நடைபெற்றது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கருப்பராயன் திருக்கோவில் விழா குழுவினர் மற்றும் விழா கமிட்டி நிர்வாகிகள் சுந்தரம், விஸ்வநாதன், தங்கவேலு, நாகசாய், ஜனார்த்தனன், விஜயகுமார் உள்பட வி எஸ் கே நகர் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...