கோவை அருகே சமையல் எரிவாயு கசிவால் தீ விபத்து - இளம்பெண் தீக்காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி!

பீளமேடு அருகேயுள்ள தண்ணீர் பந்தல் பகுதியில் சமையல் செய்து கொண்டிருந்த போது, எரிவாயு கசிவால் ஏற்பட்ட தீவிபத்தில் பாக்கியலட்சுமி என்ற இளம்பெண் உடலில் 80 சதவீத தீக்காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


கோவை: பீளமேடு அருகே சமையல் எரிவாயு கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் 35 வயது பெண் 80 சதவீத தீக்காயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோவை பீளமேடு அருகே உள்ள தண்ணீர்பந்தல் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் இவரது மனைவி பாக்கியலட்சுமி (35). இவர்களுக்கு 14 வயதில் மகன் உள்ளார்.

கருத்து வேறுபாடு காரணமாக செந்தில்குமார் பாக்கியலட்சுமியை கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. இதனால் பாக்கியலட்சுமி தனது மகனுடன் வசித்துக் கொண்டு, அதே பகுதியில் உள்ள சாலையில் பூக்கடை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் நேற்று காலை சமையல் செய்ய சமையறைக்கு சென்ற போது, அங்கிருந்த விளக்கை ஆன் செய்ய சுவிட்சை போட்டதாக தெரிகிறது. அப்போது அங்கு எரிவாயு சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு காரணமாக திடீரென தீவிபத்து ஏற்பட்டது.

இதில், பாக்கியலட்சுமி உடலிலும் தீப்பிடித்து எரிந்தது. இந்நிலையில் 80 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர்.

சம்பவம் தொடர்பாக பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...