கோவையில் மடத்தின் நிலத்தை மீட்டுக் கொடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு!

கோவை சூலூர் அடுத்த எஸ்.குமாரபாளையம் பகுதியில் மருத்துவர் சமூக நலச்சங்கத்திற்கு சொந்தமான மடத்தின் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளதாகவும், அதனை மீட்டுக் கொடுக்க வலியுறுத்தியும், தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


கோவை: சூலூர் அருகே மருத்துவர் சமூக நலச்சங்கத்திற்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு தரக்கோரி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

மருத்துவர் சமூக நலச்சங்கத்திற்கு சொந்தமான மடத்தின் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை மீட்டுக் கொடுக்க வலியுறுத்தியும் தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இதுதொடர்பாக சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜெயக்குமார், துணை தலைவர் சதீஸ்குமார் ஆகியோர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது,

சூலூர் வட்டம் எஸ்.குமாரபாளையம் கிராமம் மலையடிபாளையம் கிராமத்தில் எங்கள் சமூகத்திற்கு சொந்தமான பொதுமடம் செயல்பட்டு வருகிறது.

நூற்றாண்டுகளுக்கு முன் முன்னோர்களால் உருவாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வரும் இந்த மடத்தின் ஒரு பகுதி நிலத்தை தனியார் ஆக்கிரமித்துள்ளனர்.

எனவே அந்த நிலத்தை முறையாக சர்வே செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...

அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 10ஆம் தேதி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள பரம்பிக்குளம், சோலையாறு மற்றும் ஆழியார் அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் படிப்படியா...

கோவையில் தேசிய கால்பந்து வீரர்களுக்கு பயிற்சியாளர் வாய்ப்பு - விண்ணப்பிக்க அழைப்பு

Coimbatore மாவட்ட நேரு விளையாட்டரங்கத்தில் Khelo India திட்டத்தின் கீழ் கால்பந்து பயிற்சி மையத்திற்கு தேசிய அளவில் பதக்க...